- Advertisement -
Homeபொழுதுபோக்குயார் யாருக்கோ விருது கொடுத்தாங்க, அந்த ஒரு காரணத்துக்காக எனக்கு அந்த படத்துக்கு விருது தரலே...

யார் யாருக்கோ விருது கொடுத்தாங்க, அந்த ஒரு காரணத்துக்காக எனக்கு அந்த படத்துக்கு விருது தரலே – வெளிப்படையாக பேசிய நடிகர் சிலம்பரசன்!

- Advertisement -

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பத்துதல. இந்த படம் போதிய வரவேற்பை பெறாத நிலையில் அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமலுடன் சிம்பு நடித்த படம் தக்லைப் வருகிற ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் சிம்பு நெகடிவ் ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் சிம்பு அடுத்ததாக 3 படங்களில் நடிக்க உள்ளார். பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49வது படத்தில் நடிக்க உள்ளார். அடுத்து சிம்பு அவரது 50வது படத்தை அவரே சொந்தமாக தயாரிக்கிறார். அட்மின் சினி ஆர்ட்ஸ் என்ற பெயரில் சொந்த தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துள்ள சிம்பு, தனது 50வது படத்தை தயாரித்து நடிக்கிறார்.

சிம்பு நடிக்கும் 50வது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி டைரக்ட் செய்கிறார். இதையடுத்து சிம்பு நடிக்கும் 51வது படத்தை டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார். இப்படி அடுத்தடுத்து 3 படங்களின் அறிவிப்புகளை சிம்பு தனது பிறந்த நாளான கடந்த மாதம் 3ம் தேதி வெளியிட்டு தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இதற்கிடையே நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிலம்பரசன் கூறியதாவது, நான் ரொம்ப பீல் பண்ணியது வருத்தப்பட்டது என்ன என்றால், மன்மதன் படத்துக்குதான். ஏனென்றால் அந்த படத்தில் எனக்கு 2 ரோல் இருந்தது. அதில் அந்த மொட்டை மதன் கேரக்டர் நான் ரொம்பவும் கஷ்டப்பட்டு பெர்பாமென்ஸ் பண்ணினேன்னு சொல்ல மாட்டேன். நான் ரொம்ப உண்மையாக அந்த ரோலுக்கு பெர்பாம் பண்ணியிருந்தேன்.

நான் அந்த படம் பண்ணும்போது வளர்ந்து வரும் ஒரு நடிகராக இருந்தேன். அந்த படம் வந்த பிறகுதான் நான் ஸ்டார் நடிகர் ஆனேன். அதனால் நான் ஸ்டார் ஆக இல்லை என்ற காரணத்துக்காக எல்லாம் அவார்டுகளையும் சம்பந்தமே இல்லாத யார் யாருக்கோ எல்லாம் அவார்ட்ஸ் கொடுத்தாங்க. அப்போ தான் நான் சினிமான்னா என்னன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.

மன்மதன் படத்துக்கு விருது கிடைக்காதது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு விருது வராதது பற்றி நான் கவலைப்படவில்லை. ஏன்னா இவங்க நமக்கு கொடுக்க மாட்டாங்கன்னு எனக்கு தெரியும். 7ஜி ரெயின்போ காலனி, மன்மதன் 2 படங்களுமே இசையில் மாபெரும் ஹிட் ஆன படங்கள். ஆனா யுவன் சங்கர் ராஜாவுக்கே எந்த விருதும் கிடைக்கலே என்று நடிகர் சிம்பு அந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

சற்று முன்