- Advertisement -
Homeபொழுதுபோக்குநாங்க எல்லாம் அந்த காலத்திலேயே அப்படி… தனது இளம் வயது ரகசியங்களை கமல் முன்பு...

நாங்க எல்லாம் அந்த காலத்திலேயே அப்படி… தனது இளம் வயது ரகசியங்களை கமல் முன்பு பகிரங்கப்படுத்திய நடிகர் சிலம்பரசன்!

- Advertisement -

மனிதர்களின் வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத காலங்களில் மிகவும் முக்கியமானது பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள்தான். அதுவும் பள்ளி நாட்களில் வாழ்ந்த வாழ்க்கை ஒவ்வொருவர் மனதிலும் எப்போதுமே பசுமையான நினைவுகளாக மலர்ந்துக்கொண்டே தான் இருக்கும். இன்னும் வயதுகள் அதிகமாக அதிகமாக அந்த நினைவுகளின் சுகமும் இனிப்பும் அதிகரிக்கும்.

நடிகர் கமல்ஹாசன் நடிகர் சிம்பு இருவரும் இணைந்து நடித்துள்ள படம் தக்லைஃப். இதில்தான் முதன்முறையாக கமலுடன் சிம்பு இணைந்து நடித்திருக்கிறார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்த படம் வருகிற ஜூன் மாதம் 5ம் தேதி திரைக்கு வர உள்ளது. இன்னும் 25 நாட்களே இருக்கின்றன.

- Advertisement -

வருகிற 16ம் தேதி தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடப்பதாக இருந்தது. ஆனால் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதட்டம் அதிகரித்ததால் அந்த விழாவை படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துவிட்டார்.

எனினும் தக்லைஃப் படத்தின் மற்ற பிரமோசன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கமல்ஹாசன் சிலம்பரசன் மணிரத்னம் திரிஷா உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர். நடிகர் சிலம்பரசன் படப்பிடிப்பு தளங்களுக்கு ஒழுங்காக வர மாட்டார், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏதேனும் விவாகாரம் செய்வார் என்ற குற்றச்சாட்டுகள் ஆரம்பத்தில் இருந்தன. அதற்கு அவரே விளக்கம் தரும் விதமாக ஒரு நேர்காணலில் சிம்பு பேசியிருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகர் கமல் மற்றும் திரிஷா ஆகியோருடன் நடிகர் சிலம்பரசன் பங்கேற்றார். அப்போது சிம்பு கூறியதாவது, ஸ்கூலுக்கு போயிருக்கேன். ஆனால் கிளாஸ் ரூமுக்கு போக மாட்டேன். ஸ்கூலுக்கு வெளியேதான் இருப்பேன். டான்ஸ் ஆடுவேன். இல்லேன்னா ஸ்போர்ட்ஸ்க்கு போயிடுவேன்.

ஸ்கூலில் நிறைய உதை வாங்கியிருக்கேன். வெளியில் முட்டி போட வெச்சிருக்காங்க. நிறைய அடிச்சிருக்காங்க. முடியை வெட்டியிருக்காங்க என்று வெளிப்படையாக நடிகர் சிலம்பரசன் கூறினார். அப்போது அருகில் இருந்த கமல்ஹாசன், அதுதான் இப்போ விடாமல் வளர்த்துக்கிட்டு இருக்கார் என்று கமெண்ட் அடித்தார். பள்ளியில் படித்த போது செய்த வேலையை தான் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் சிம்பு செய்தாரா என அவரது ரசிகர்களே கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்