- Advertisement -
Homeபொழுதுபோக்குதன்னை நேரில் சந்திக்க வரும் ரசிகர்களிடம் நடிகர் சிம்பு கேட்கும் முக்கிய கேள்வி… - எந்த...

தன்னை நேரில் சந்திக்க வரும் ரசிகர்களிடம் நடிகர் சிம்பு கேட்கும் முக்கிய கேள்வி… – எந்த ஹீரோவுமே இப்படி கேட்டதே இல்லையே? நீங்க வேற லெவல் ப்ரோ…

- Advertisement -

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வரை நடிகர் சிம்பு என்றாலே ஒரு பிரச்னைக்குரிய மனிதராக சர்ச்சைக்குரிய ஒரு கலைஞராக தான் பார்க்கப்பட்டார். பொதுவெளியில் யார் எந்த கேள்வி கேட்டாலும் அதிரடியான அடாவடியான பதிலை சொல்வார். இயக்குனர் தயாரிப்பாளர்களை மதிக்க மாட்டார். படப்பிடிப்புக்கு சரியாக வர மாட்டார் என பல விமர்சனங்கள் அவர் மீது இருந்தன.

இது ஒரு விதத்தில் உண்மையாகவும் இருந்தது. இதனால் நடிகர் சிலம்பரசன் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார். பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் அவருக்காக படம் எடுக்க வாய்ப்பு இருந்தும் அவரது தனிப்பட்ட குணத்துக்காகவே அவரை தவிர்த்தனர். இதனால் உச்சத்தை தொட வேண்டிய சிம்புவின் கேரியர் மந்தமாகவே இருந்து வந்தது.

- Advertisement -

ஆனால் வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு படத்துக்கு பிறகு நடிகர் சிம்புவின் நடவடிக்கைகளில் பெரிய மாற்றங்களை காண முடிகிறது. நல்ல படங்களை நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கிறார். படப்பிடிப்புகளுக்கு சரியான நேரத்துக்கு வந்து இயக்குனர் தயாரிப்பாளருக்கு முழுமையான ஒத்துழைப்பு தருகிறார்.

பொது நிகழ்ச்சிகளில் படம் பிரமோ நிகழ்ச்சிகளில் மிகவும் நிதானமாகவும் அதே நேரத்தில் மிகுந்த பொறுப்புணர்வுடனும் பேசுகிறார். இது சிம்புவா என்று அவரது ரசிகர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு தன்னை மாற்றிக்கொண்ட நடிகர் சிம்பு, தக்லைஃப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் அவ்வப்போது தனது ரசிகர்களை சந்திப்பதை நடிகர் சிம்பு வழக்கமாக கொண்டிருக்கிறார். அப்படி தன்னை நேரில் சந்திக்க வரும் ரசிகர்களிடம், அடுத்தடுத்து நான் எந்த மாதிரியான கதைகளில், கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என நீங்கள் ஆசைப்படறீங்க? என்று கேட்கிறார்.

அப்படி ரசிகர்கள் சொல்லும் முக்கியமான கதைகளை, கேரக்டர்களை கவனத்தில் வைத்துக்கொள்ளும் நடிகர் சிம்பு, தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், தனது அபிமான இயக்குனர்களிடம் எனக்காக இதை போன்ற கதைகளை, கேரக்டர்களை உருவாக்குங்க என்றும் கூறுகிறார். ரசிகர்களின் விருப்பமே தன் கேரக்டர் என்பதில் சிம்பு உறுதியாக இருப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்