- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க மறுத்தாரா சிம்பு? மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் கோரிக்கையை...

சூர்யா படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க மறுத்தாரா சிம்பு? மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் கோரிக்கையை நிராகரித்தது ஏன்?

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் ஒரு ஹீரோ படத்தில் மற்ற ஹீரோக்கள் நடிப்பது பேஷனாகி விட்டது. பான் இந்தியா படங்களில் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னட மொழி நடிகர்கள் இணைந்து நடிப்பது போலவே தமிழ் படங்களிலும் ஒரு ஹீரோ படத்தில் மற்றொரு நாயகன் நடிப்பது படத்துக்கு அதிக கவனத்தை ரசிகர்களிடம் பெற்றுத் தருகிறது.

அந்த வகையில்தான் தக்லைஃப் படத்தில் கமலுடன் சிம்பு நடித்தார். அதே போல் கங்குவா படத்தில் சூர்யாவுடன் கேமியோ ரோலில் அவரது தம்பி கார்த்தி நடித்திருந்தார். ஆனால் கங்குவா 2 படத்துக்காக லீடு காட்சியாக அது இருந்த போதிலும் கங்குவா 2 பாகம் உருவாகாமல் போய்விட்டது.

- Advertisement -

இந்த சூழலில் இப்போது கருப்பு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 47வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு சூர்யா 47 என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஒரு முக்கியமான ரோலில் வில்லன் கேரக்டரில் ஒரு பெரிய ஸ்டார் ஹீரோ நடிக்க வேண்டும் என்று இயக்குனர் ஜித்து மாதவன் விரும்பியிருக்கிறார். இதற்காக நடிகர் சிம்புவிடம் அவர் பேசியிருக்கிறார். ஆனால் சிம்பு தரப்பில் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை. அவர் நடிக்க விரும்பவில்லை என்றே தெரிகிறது.

- Advertisement -

நடிகர் சூர்யாவுடன் நடிக்க சிம்பு விரும்பாதது இதற்கு காரணமா, அல்லது சம்பளம் கால்ஷீட் பிரச்னையா அல்லது அவரது கேரக்டர் வொர்த் ஆக இல்லையா என பல கேள்விகள் எழுந்துள்ளது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக சிம்பு படம் எதுவும் வெளிவராத நிலையில் சூர்யா படத்தில் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிம்பு சூர்யாவுடன் நடிக்க ஆர்வம் காட்டாத நிலையில் மற்ற சில ஹீரோக்களுடன் அந்த வில்லன் கேரக்டரில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதற்கிடையே இதுபோன்ற வில்லன் கேரக்டரில் நடிக்க ரவிமோகன் விஜய் சேதுபதி போன்றவர்கள் ஆர்வமாக இருப்பதால் அவர்களில் யாரேனும் ஒருவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்