- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக...

நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கின்றனர் – அதிரடியாக பேசிய நடிகர் சிம்பு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். தக்லைஃப் படத்துக்கு பிறகு இப்போது அரசன் என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை தாணு தயாரிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடந்த நிலையில் இப்போது 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

நடிகர் சிம்புவின் தந்தை இயக்குனர் டி ராஜேந்தர், சென்னை திநகரில் இந்தி பிரச்சார சபா பகுதி வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி ராஜேந்தர் கூறியதாவது, ஏதோ இந்த ஓட்டு பிரியுது. யாருக்கோ ஏதோ ஒண்ணு சரியுது, மக்கள் மனதில் ஏதோ ஒரு விஷயம் பற்றி எரியுது இவ்வாறாகத்தான் நான் இந்த தேர்தலை பார்க்கிறேன்.

- Advertisement -

இன்றைய நிலையில் சட்டப்பேரவை நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கு குறைந்தது 20 கோடி 40 கோடி 60 கோடி 80 கோடி 100 கோடி 110 கோடி வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. பதவியில் இருப்பவர்கள் பல லட்சக்கணக்கான கோடிகளை குவித்து வைத்துள்ளனர். தற்போது ஓட்டுப் பெறுவதற்கு சிலர் கரன்சியை தான் நம்புகிறார்கள். மக்களின் கரத்தை நம்பவில்லை என்று டி ராஜேந்தர் கூறினார்

நேற்று மாலை டி ராஜேந்தரின் மகன் நடிகர் சிலம்பரசன் தி நகரில் உள்ள வாக்குசாவடியில் தனது ஓட்டை பதிவு செய்தார். அப்போது அவரை சந்தித்த செய்தியாளர்களிடம் சிம்பு கூறியதாவது, அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று நேற்று ட்வீட் போடலாம் என்று இருந்தேன். ஆனால் இந்த தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தலாக இருப்பதால் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக உள்ளனர். அதனையே நல்ல மாற்றமாக நான் பார்க்கிறேன்.

- Advertisement -

தேர்தலில் மாற்றம் வர வேண்டுமா இல்லையா என்பதை நான் முடிவு செய்ய முடியாது. மக்கள் மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. நான் ஒரு நடிகனாக இருக்கிறேன். எனக்கு எல்லா கட்சியிலும் ரசிகர்கள் உள்ளனர். எனவே ஒரு சார்பாக எந்த ஒரு கருத்தையும் நான் சொல்ல முடியாது, அவரவர்களுக்கு பிடித்தவர்களுக்கு ஓட்டு போட போகிறார்கள்.

இந்த தேர்தலில் ஓட்டு போட்டே ஆக வேண்டும் என்ற அபரிமிதமான ஆர்வம் மக்களிடம் தெரிகிறது. மே 4ம் தேதி பார்ப்போம். இந்த முறை இளைஞர்கள் அதிகம் வாக்களிப்பது நல்ல விஷயம்தான். என் அப்பா டி ஆர் சொன்னது அவரது கருத்து. நான் வேறு அவர் வேறு. மக்கள் தெளிவாக உள்ளார்கள். அவர்கள் சரியானவர்களையே தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறேன் என்று நடிகர் சிலம்பரசன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்