- Advertisement -
Homeபொழுதுபோக்குவெங்கட் பிரபு இயக்கத்தில் இத்தனை ரோலில் நடிக்கிறாரா விஜய்... ஆரம்பமே செம மாஸ்தான் போங்க...

வெங்கட் பிரபு இயக்கத்தில் இத்தனை ரோலில் நடிக்கிறாரா விஜய்… ஆரம்பமே செம மாஸ்தான் போங்க…

- Advertisement -

இந்த ஆண்டு ஜனவரி மாதம் லியோ படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து, அதன் குறித்த தகவல் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. காஷ்மீரில் ஆரம்பித்த இதன் படப்பிடிப்பு, 60 நாட்களை கடந்து நடைபெற்றது. பின்னர் சென்னைக்கு வந்த படக்குழு, மீதி வேலைகளை முடிக்க, தற்போது லியோவை ரிலீஸ் செய்வதற்கான ப்ரீ புரோடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

படத்தின் மீதான எதிர்பார்ப்பை சிறிதும் சிதறவிடாமல் பார்த்துக் கொள்ளும் தயாரிப்பாளர் லலித்குமார், அடுத்தடுத்த அப்டேட்களை விட்டு அசர வைக்கிறார். விஜய் பிறந்தநாளுக்கு நா ரெடி தான் பாடல், சஞ்சய் தத் பிறந்தநாளுக்கு அவரின் கிளிம்ப்ஸ் வீடியோ, பின்னர் அர்ஜுனுக்கு என சிறப்பு வீடியோவை வெளியிட்டு ஆச்சரியத்தை உண்டு பண்ணினார்.

- Advertisement -

இது ஒரு பக்கம் இருக்க, லியோவுக்கான வர்த்தகமும் மிகப் பெரிய அளவில் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் மட்டும் 125 கோடி ரூபாய்க்கு இந்த படத்தை வாங்கியுள்ளதாகவும், இசை, சேட்டிலைட் உரிமை என மொத்தம் 430 கோடி ரூபாய்க்கு பிசினஸ் நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. வரும் 19ஆம் தேதி படம் ரிலீஸாகும் நிலையில், அடுத்ததாக லியோவின் டீசர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இப்படி லியோவின் படத்தின் பேச்சுகளே சமூக வலைதளத்தில் சுற்றி கொண்டிருக்க, அடுத்ததாக தளபதி 68 படத்திற்கான தகவல்களும் மெல்ல மெல்ல கசிந்து வருகின்றன. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அது மட்டுமல்லாம் யுவன் சங்கர் ராஜாவும் படத்தில் இருப்பதால் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது.

- Advertisement -

இதற்கு சிஎஸ்கே என டைட்டில் வைக்கப்பட இருப்பதாகவும் தகவல் கசிந்தது. இது மட்டுமல்லாமல் கதாநாயகியாக ஜோதிகா, வில்லனாக எஸ் ஜே சூர்யா, விஜய்யின் சகோதரராக ஜெய் ஆகியோரும் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வெங்கட் பிரபு, இது அரசியல் படம் இல்லை என்பதை மட்டும் கூறினார்.

இப்படி இருக்க தற்போது தளபதி 68-ல் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே அழகிய தமிழ்மகன், வில்லு, கத்தி, புலி, பிகில் படங்களில் விஜய் டபுள் ரோலில் நடித்து அசத்தியிருந்தார். இதேபோல், டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டை சூர்யாவின் மாஸ் திரைப்படத்தில் வெங்கட் பிரபு தொட்டார். தற்போது இருவர் கூட்டணியில், இரட்டை ஹீரோ கதையை எடுப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. லியோ வெளியானதும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்