தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லன் மற்றும் காமெடி கேரக்டர்களில் நடித்தவர் நடிகர் தியாகு. சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் அவர் நடித்திருக்கிறார். குறிப்பாக பொங்கலோ பொங்கல் படத்தில் அரசியல்வாதி கேரக்டரில் அவர் நடித்திருந்தது பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. கிழக்கு வாசல் என்புருஷன்தான் எனக்கு மட்டும்தான் என ஏராளமான படங்களில் தியாகு நடித்திருக்கிறார்.
நடிகர் தியாகு மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் மிக நெருக்கமான நண்பர்களில் மிக முக்கியமான ஒருவர். அதனால் விஜயகாந்த் நடித்த பெரும்பாலான படங்களில் நடிகர் தியாகுவும் நடித்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆனால் சமீப காலமாக முதுமை காரணமாக நடிகர் தியாகு படங்களின் நடிப்பதில்லை.
மேலும் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு அவர் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில்தான் சில இடங்களுக்கு வீல் சேரில் அமர்ந்தபடி தான் வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் தியாகு விஜயகாந்துடன் இன்றைய முதல்வர் விஜயை ஒப்பிட்டு பாராட்டி பேசியிருக்கிறார்.
அந்த நேர்காணலில் நடிகர் தியாகு கூறியதாவது, என் நண்பன் விஜயகாந்த் ஒருநாள் முதலமைச்சராக வருவார் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் அந்த இடத்தை இன்று தம்பி விஜய் நிரப்பி விட்டார். விஜய் முதலமைச்சர் ஆகி இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சீரும் சிறப்புமாக ஆட்சியை நடத்த வேண்டும் என்பதே என் விருப்பம்.
லஞ்சம் போதைப் பொருள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒழிப்பதாக விஜய் கூறியுள்ளார். அவர் சொன்னதை நிச்சயம் செய்து காட்டுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் அமைதியான முறையில் ஆட்சியை நடத்தி வருகிறார். அது சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம்.
ஆனால் விஜய் தனது பணிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார். திமுக தரப்பில் இன்னும் 6 மாதங்கள் வரை காத்திருக்கலாம் என்று கூறி வருகின்றனர். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. திருமாவளவன் முதல் முஸ்லிம் லீக் கம்யூனிஸ்ட் கட்சிகள் வரை பலரும் விஜயின் பக்கம் சென்று விட்டனர். அதனால் உறுதியாக 5 ஆண்டுகள் விஜய் தான் ஆட்சி செய்வார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று நடிகர் தியாகு கூறியிருக்கிறார்.





