- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த 2 பெண்களில் யாரை நீங்க ஏத்துக்குவீங்க? நடிகர் சிம்புவின் கேட்கப்பட்ட எடக்கு மடக்கான கேள்வி...

அந்த 2 பெண்களில் யாரை நீங்க ஏத்துக்குவீங்க? நடிகர் சிம்புவின் கேட்கப்பட்ட எடக்கு மடக்கான கேள்வி – அசராமல் பதில் தந்து அசத்திய எஸ்டிஆர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இப்போது கமல்ஹாசனுடன் அவர் நடித்த தக்லைஃப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்த படம் வருகிற ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. கமல் சிம்பு மணிரத்னம் ஏஆர் ரகுமான் கூட்டணியில் தக்லைஃப் உருவாகியுள்ளது.

இதையடுத்து நடிகர் சிம்பு ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் எஸ்டிஆர் 49 தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 50 அஸ்வின் மாரிமுத்து இயக்கத்தில் எஸ்டிஆர் 51 என அடுத்தடுத்த 3 படங்களில் நடிகர் சிம்பு நடிக்கிறார். இதில் எஸ்டிஆர் 50 படத்தை நடிகர் சிம்புவே சொந்தமாக தயாரிக்கிறார். வரலாற்று பின்னணியில் இந்த படம் உருவாகிறது.

நடிகர் சிம்புவுக்கு வயது 40 கடந்து விட்டது. அவரது தம்பி குறளரசன் தங்கை இலக்கியா ஆகியோருக்கு திருமணமாகி பிள்ளைகளும் பிறந்து விட்டனர். மாமா பெரியப்பா ஆன நடிகர் சிம்பு இன்னும் அப்பா ஆகவில்லை. அவரது திருமணம் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே வருகிறது. இதற்கிடையே சில காதல்களிலும் சிக்கி சிம்பு மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வெளியே வந்தார்.

இதனால் சினிமா விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் அவர் எங்கு சென்றாலும் ரசிகர்கள் அவரிடம் எழுப்பும் முக்கிய கேள்வியாக, முதல் கேள்வியாக இருப்பது உங்கள் திருமணம் எப்போது என்பதுதான். இதற்கு பலமுறை பலவிதங்களில் சிம்பு பதிலளித்து விட்டார். எனினும் சிம்பு திருமணத்தை ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிம்புவிடம் வித்யாசமான ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. ஒருவர் கிராமத்து பெண், மற்றொருவர் நகரத்துப் பெண். இந்த 2 பெண்களில் நீங்கள் யாரை ஏற்றுக்கொள்வீர்கள் என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகர் சிம்பு கூறுகையில், முதலில் யாரையும் பிரித்து பார்க்காதீர்கள். ஜீன்ஸ் அணிந்த பெண்கள் கெட்டவர்களும் இல்லை. சுடிதார் அணிந்த பெண்கள் நல்லவர்களும் இல்லை. அப்படி நான் தேர்வு செய்ய வேண்டும் என்றால் அவர் பெண்ணாக இருந்தால் மட்டும் போதும் என்று அசத்தலான பதிலை சிம்பு தந்திருக்கிறார்.

சற்று முன்