தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் மிக முக்கியமான இடத்தில் இருப்பவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அவர் நடித்த போதே ரசிகர்களால் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர். இப்போது தக்லைப் என்ற படத்தில் நடிகர் கமலுடன் முதன் முறையாக இணைந்து நடித்திருக்கிறார்.
நாயகன் படத்துக்கு பிறகு நடிகர் கமல், இயக்குனர் மணிரத்னம் இணைந்துள்ள தக்லைப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் நடிகர் சிம்பு வில்லன் கேரக்டரில் நடித்திருக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிம்பு அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி மற்றும் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் அடுத்த படங்களில் நடிக்க உள்ளார்.
சிம்பு நடிக்கும் அவரது 50வது படத்தை நடிகர் சிம்புவே தயாரிக்கிறார். அட்மின் சினி ஆர்ட்ஸ் என்ற பெயரில் இதற்கான சொந்த தயாரிப்பு நிறுவனம் துவங்கிய சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்த வரலாற்று படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளார். சமீபத்தில் அவரது பிறந்த நாளான பிப்ரவரி 3ம் தேதி இந்த அறிவிப்புகளை அவரே வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிலம்பரசன் பேசியதாவது, லவ்வை விட பிரண்ட்ஷிப் தான் பெரிய விஷயம் என்று நான் நினைக்கிறேன். ஏன்னா லவ்வரை கூட நாம செலக்ட் பண்றோம். அந்த பொண்ணு இப்படி இருக்கணும் அழகா இருக்கணும். கண்ணு இப்படி இருக்கணும் மூக்கு இப்படி இருக்கணும் இப்படி பேசணும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஆனால் பிரண்ட்ஷிப்பில் இப்படி ஒரு பிரண்ட் வேணும், அப்படி ஒரு பிரண்ட் வேணும் என்று நாம் யாரும் நினைப்பது இல்லை. அதுவா வந்து அமையறதுதான். பிரண்ட்ஷிப் என்பது நாம் செலக்ட் பண்றது இல்லே. நம்மை மீறிய ஒரு உறவு பிரண்ட்ஷிப் ஆக நமக்குள் உருவாகிறது. அதனால் பிரண்ட்ஷிப்புக்கு இலக்கணம் எல்லாம் எதுவும் சொல்ல முடியாது.
கடவுள் இல்லை என்று நான் எப்போதுமே நினைச்சது இல்லை. ஏனென்றால் நம்மை மீறிய பல விஷயங்கள் இங்கே நடக்கிறது. அதனால் கண்டிப்பாக கடவுள் இருக்கிறார். ஆனால் கடவுளை யாரும் பார்த்தது இல்லை. ஆனால் கடவுள் இல்லை என்று அந்த மாதிரி நான் நினைத்ததே இல்லை என்று அந்த நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் வெளிப்படையாக தத்துவமாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.





