- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை சிம்ரனின் உண்மையான பெயர் என்ன? அட இது கோலிவுட் வட்டாரத்துக்கே தெரியாத ரகசியம் -...

நடிகை சிம்ரனின் உண்மையான பெயர் என்ன? அட இது கோலிவுட் வட்டாரத்துக்கே தெரியாத ரகசியம் – அவரே சொன்ன தகவல் இது!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளின் உண்மையான பெயர் வேறாக இருக்கும். ஆனால் படத்தில் நடிக்க வந்த பிறகு ரசிகர்களின் கவனத்தை கவரும் விதமாக அவர்களது உண்மையான பெயர்களை இயக்குனர்கள் மாற்றி விடுவது வழக்கம். உதாரணமாக குப்புசாமி கருப்புசாமி ராமசாமி என்றும் சுந்தரி கருப்பாயி பூங்கொடி என கிராமப்புறங்களில் வைக்கப்படும் பெயராக இருந்தால் நாயகி பெயர் எடுப்பாக இருக்காது என்பதே இதற்கு காரணம்.

உதாரணமாக ரஜினியின் உண்மையான பெயர் சிவாஜிராவ். சினிமாவுக்காக கே பாலசந்தர் ரஜினிகாந்த் என மாற்றிவிட்டார். விஜயராஜ் பெயர் விஜயராஜ் ஆக மாறியது. ரங்கராஜ் சத்யராஜாக மாறினார். சுப்ரமணி கவுண்டமணியாக மாற்றப்பட்டார். அதே போல் சுஹாசினி என்ற நிஜப் பெயர்தான் நடிகை சினேகா என்று சினிமாவுக்கு வந்த பின் மாறியது.

- Advertisement -

இப்படி சினிமாவில் சொந்த பெயரில் நடிப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. நடிகர் ராஜ்கிரணின் உண்மையான பெயர் காதர் மொய்தீன் பாய். தயாரிப்பாளராக அவர் இருந்த போது பாய் என்றுதான் அவரை பலரும் அழைப்பார்கள். நடிகை நயன்தாராவின் பெயர் டயானா மரியா குரியன்தான். நடிகர் சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன் என இப்படி பலரது பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் இயக்குனர் பாரதிராஜா தனது படங்களில் அறிமுகமான ராதா அம்பிகா ரேகா ரேவதி நதியா என பலரது பெயர்களை மாற்றி வைத்தார். இப்போதும் அந்த பெயர்கள்தான் அவர்களுக்கு தமிழ் சினிமாவில் பெரிய புகழை பெற்றுத் தந்திருக்கின்றன. அதே நேரத்தில் நிஜப்பெயரிலேயே நடித்து பெரிய புகழ் பெற்றவர்களும் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர்.

- Advertisement -

இந்த வரிசையில் இப்போது நடிகை சிம்ரனின் உண்மையான பெயர் சிம்ரன் அல்ல என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை சிம்ரன் இதுபற்றி கூறியிருக்கிறார். நடிகை சிம்ரன் கூறியதாவது, என்னுடைய உண்மையான பெயர் ரிஷி பாலா. இப்பவும் என் பாஸ்போர்ட்டில் ரிஷிபாலா என்ற பெயர்தான் உள்ளது.

ஆனால் ரிஷி என்கிற பெயர் ஆண் பெயர் போல இருப்பதாக சொல்லி இயக்குனர் சாவென் குமார் டக் தான் என் பெயரை சிம்ரன் என மாற்றினார். சொல்லப்போனால் என் பெயரையே எனக்கு முதலில் உச்சரிக்க தெரியாது. சிம்ரன் என்பது பஞ்சாபி பெயர். நானும் பஞ்சாபிதான். ஆனால் எனக்கு பஞ்சாபி வராது. பிறந்தது வளர்ந்தது எல்லாமே மும்பையில்தான். என் பெயரை இயக்குனர் சாவென் குமார் டக் தான் சிம்ரன் என மாற்றினார் என்று அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்