- Advertisement -
Homeபொழுதுபோக்குயாரேனும் முறைகேடு செய்தால் மோசடியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - நடிகர் சிவகார்த்திகேயன் திடீர் எச்சரிக்கை!

யாரேனும் முறைகேடு செய்தால் மோசடியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – நடிகர் சிவகார்த்திகேயன் திடீர் எச்சரிக்கை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். மெரினா படம் மூலம் அறிமுகமான சிவகார்த்திகேயன் இன்று 25 படங்களில் மட்டுமே நடித்த நிலையில் முன்னணி ஹீரோவாக மாறியிருக்கிறார். தொடர்ந்து வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்து வருகிறார்.

திரைப்பட நடிகராக மட்டுமின்றி எஸ்கே புரடக்சன்ஸ் என்ற பெயரில் சிவகார்த்திகேயன் சொந்தமாக படங்களையும் தயாரித்து வருகிறார். கனா நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா வாழ் கொட்டுக்காளி தாய்கிழவி உள்ளிட்ட படங்களை சிவகார்த்திகேயன் தான் தயாரித்திருக்கிறார்.

- Advertisement -

இப்போது நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் உருவாகும் சேயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார். தாய்கிழவி படத்தின் இயக்குனர் சிவக்குமார் முருகேசன் தான் இந்த படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்த படமும் தாய்கிழவி படம் உருவான மதுரை தேனி பகுதிகளில்தான் படமாக்கப்பட்டு வருகிறது.

அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புரடக்சன்ஸ் தயாரிப்பில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இதற்கிடையே எஸ்கே புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் பெயரை பயன்படுத்தி முறைகேடுகளும் மோசடிகளும் நடப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதில் சிவகார்த்திகேயன் பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரடக்சன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, எங்கள் நிறுவனத்தின் திரைப்படங்களுக்கான நடிகர்கள் தேர்வு செய்யப்படுவது இயக்குனர்களோ ஒருங்கிணைப்பாளர்களோ காஸ்டிங் ஏஜெண்டுகளோ அல்லது வேறொரு நபர்களோ தேர்ந்தெடுப்பதில்லை.

எஸ்கே புரொடக்சன்ஸ் வெளியிடும் எந்த ஒரு அறிவிப்புகள் மற்றும் தகவல்கள் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் மட்டும் தான் வெளியிடப்படும். இது தொடர்பாக வாட்ஸ் அப் செய்திகள் மின்னஞ்சல்கள் அழைப்புகள் அல்லது சமூக வலைதளங்களை நம்ப வேண்டாம். சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் அதில் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்