- Advertisement -
Homeபொழுதுபோக்குஇரண்டே வாரங்களில் வசூல் ரூ. 907 கோடி; 23 படங்களை ‘ஜெராக்ஸ்‘ எடுத்ததுக்கு, கொட்டிய பணமழை

இரண்டே வாரங்களில் வசூல் ரூ. 907 கோடி; 23 படங்களை ‘ஜெராக்ஸ்‘ எடுத்ததுக்கு, கொட்டிய பணமழை

- Advertisement -

சமீபமாக எந்த படங்கள் வந்தாலும், அடுத்த சில நாட்களிலேயே வசூல், 100 கோடி 200 கோடி ஆனதாக தகவல்கள் பரவி விடுகிறது. மொபைல் போன், ஓடிடி தளம் என ரசிகர்கள் அதிக நேரத்தை அதில் கழிப்பதால், தியேட்டர்களுக்கு ரசிகர் கூட்டம் வருவதில்லை என்று சொல்லப்பட்டாலும், புதிய ரிலீஸ் படங்களுக்கு வசூல்மழை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் இம்மாதம் 7ம் தேதி வெளியான இந்த படம், இரண்டே வாரங்களில், 907 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இதை அந்த படத்தின் தயாிப்பு நிறுவனமே போஸ்டராக வெளியிட்டுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த படம் வெளியான அன்றே, ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் இந்த படத்தை, படத்தின் இயக்குநரை பெரும்பாலான ரசிகர்கள், கிண்டலடித்தனர்.

- Advertisement -

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் 4 படங்கள் ஹிட் கொடுத்த இயக்குநர் அட்லீ இயக்கிய படம் ‘ஜவான்’ ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், யோகிபாபு, பிரியாமணி, சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்த இப்படம், 14 நாட்களில் 907.54 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இதுகுறித்த போஸ்டரை, ஜவான் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இயக்குநர் அட்லீயை பொருத்த வரை, ஏற்கனவே வந்த படங்களில் இருந்து கதையை, பல காட்சிகளை அப்படியே காப்பி எடுத்து, தனது படங்களின் திரைக்கதைகளை, காட்சிகளை அமைப்பவர் என்று, ரசிகர்களால் விமர்சனம் செய்யப்படுகிறது. இதற்கு முந்தைய சில படங்கள் வந்த போதும் இந்த புகார் எழுந்தது.

- Advertisement -

அதே போல், ‘ஜவான்’ படம் ரிலீஸ் ஆன அன்றே, படம் பார்த்த ரசிகர்கள் பலரும், இது பல படங்களின் அப்பட்டமான காப்பி என, கடுமையாக விமர்சனம் செய்தனர், ஒரு படத்துக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு ‘ஜவான்’ படம் பார்க்க வரும் ரசிகர்கள், 23 படங்கள் பார்க்கலாம் எனவும் கிண்டலடித்தனர். பழைய படங்கள் முதல் தற்போது வந்த ஜெயிலர் படம் வரை, 23 படங்களில் இருந்து,இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது, எனவும் கூறினர்.

ஆனால், ஜவான் படம் வெளியாகி 14 நாட்களே ஆன நிலையில், அதாவது இரண்டே வாரங்களில், 907 கோடி ரூபாயை வசூலில் கடந்துள்ளது. அதுவும் அதிகாரபூர்வமாக தயாரிப்பு நிறுவனமே போஸ்டரில் அறிவித்துள்ளது. மொக்கையான படம் என்று, கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஒரு படம், எப்படி இப்படி ஒரு வசூல் சாதனையை படைக்க முடியும் என்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு என ஸ்டார் வேல்யூ தான், இந்த வசூல் வெற்றிக்கு காரணம் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.

- Advertisement -

சற்று முன்