- Advertisement -
Homeபொழுதுபோக்குகுறை சொல்றவன் சொல்லிட்டே தான் இருப்பான், அவனை கண்டுக்காதீங்க - ரசிகர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன்...

குறை சொல்றவன் சொல்லிட்டே தான் இருப்பான், அவனை கண்டுக்காதீங்க – ரசிகர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அட்வைஸ்!

- Advertisement -

சமீபகாலமாக நட்சத்திர நடிகர்கள் தங்களது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றி பொதுமக்களுக்கு அவ்வப்போது நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக கல்வி மருத்துவம் சார்ந்த உதவிகளை செய்கின்றனர். இதனால் மக்கள் மத்தியில் நல்ல கவனத்தை பெறுகின்றனர்.

இன்றைய தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். அமரன் பராசக்தி மதராஸி படங்களை தொடர்ந்து அவர் தற்போது சேயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் சொந்தமாக தயாரிக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இது ஒரு ரசிகர் மன்ற சந்திப்பு போல இல்லாமல் கட்சி மாநாடு போல மிக பிரமாண்டமான ஏற்பாடு செய்யப்பட்டு காட்சியளிக்கிறது. சுமார் 2000 நிர்வாகிகள் வெள்ளை சட்டை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சென்னை முகலிவாக்கத்தில் நடந்த சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, நன்றாக படியுங்கள். நன்றாக சம்பாதியுங்கள். குடும்பம் தான் முதலில் கவனிக்க வேண்டும். தினமும் குறைந்தது 15 நிமிடங்களாவது புத்தகங்களை படியுங்கள்.

- Advertisement -

நிறைய புத்தகங்களை படிக்க படிக்க அது நம்மை மேம்படுத்தும். சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருப்பதற்கும் அது ஒரு நல்ல மாற்றாகவும் இருக்கும், சேயோன் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைபடைந்துள்ள நிலையில் மீதமுள்ள 40 சதவீத படப்பிடிப்பு பணிகள் இன்னும் நடக்க வேண்டி உள்ளது. ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் முழுமையான அதிரடி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த படம் உருவாகி வருகிறது.

நாம என்ன செஞ்சாலும் குறை சொல்றவன் குறை சொல்லிட்டு தான் இருப்பான். நம்ம வேலையை பார்த்துட்டு போயிட்டே இருக்கணும். அது மட்டும் இல்லாம நான் என்ன செஞ்சாலும் குறை சொல்ல ஒரு கூட்டம் இருக்கு. ஒரு நதி தன்னோட வழியை உருவாக்கிக்கிட்டு அது பாட்டுக்கு போய்கிட்டே இருக்கும். அதுபோல நாமும் நம்மளோட வேலையை செஞ்சுட்டு போயிட்டே இருக்கணும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் அந்த கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்