தமிழ் சினிமாவில் துரோகி இறுதிச்சுற்று சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கியவர் சுதா கொங்கரா. இதில் துரோகி படம் ரசிகர்களிடம் எடுபடவில்லை. இறுதிச்சுற்று படம் மாதவன் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றது. சூரரைப் போற்று படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வணிக ரீதியான வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு சுதா கொங்கரா இயக்கிய படம்தான் பராசக்தி. இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு அவ்வளவு அழுத்தமாக இல்லை. குறிப்பாக கதை திரைக்கதையில் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் கவனத்தை பெறும் விஷயங்கள் இல்லை என்பது கவனித்தக்கது. வணிக ரீதியாக 100 கோடி ரூபாய் வசூலித்தாலும் விமர்சனத்தில் இந்த படம் ஒரு மொக்கை தான்.
பராசக்தி படத்தை பொருத்த வரை படத்தில் பேசப்பட்ட ஒரு நபர் நடிகர் ரவிமோகன் மட்டும்தான். அவர் மீது தனிப்பட்ட முறையில் பல விமர்சனங்கள் இருந்தாலும் நல்ல நடிகர் என்பதை தனது படங்களில் தொடர்ந்து நிரூபித்தவர். ஜெயம் தனி ஒருவன் பேராண்மை வனமகன் போகன் சந்தோஷ் சுப்ரமணியம் படங்களில் அவரது நடிப்பு ஆற்றல் சிறப்பாக வெளிப்பட்டு இருக்கும்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பராசக்தி படக்குழுவினர் பங்கேற்ற நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனை மட்டமாக விமர்சிக்கும் விதமாக பராசக்தி பட இயக்குனர் சுதா கொங்கரா பேசியிருக்கிறார். படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் திரைக்கதைகளை நடிகர்கள் ரவிமோகன், அதர்வா போன்றவர்கள் படிப்பார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் அதை படிப்பதே இல்லை என்று பேசியிருந்தார்.
இதற்கு அப்போதே பதிலளித்த நடிகர் சிவகார்த்திகேயன், நானும் திரைக்கதைகளை படித்திருக்கிறேன். அமரன் மதராஸி மாவீரன் போன்ற படங்களுக்கு திரைக்கதைகளை படித்திருக்கிறேன். நான் வேடிக்கையாக இருக்கிறேன் என்பதால் எனக்கு படிக்கும் பழக்கம் இல்லை என்று அர்த்தமல்ல.
என் வாழ்க்கையை என்னுடன் வாழ்ந்து பார்த்தது போல பேசக்கூடாது. படிக்கும் பழக்கத்தை நீங்கள் தான் கண்டுபிடித்தது போலவும் பேசக்கூடாது என்று சிரித்த முகத்துடன் அதே நேரத்தில் சுதா கொங்கராவுக்கு நோஸ்கட் தரும்படி நடிகர் சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே பராசக்தி பட தோல்விக்கு விஜய் ரசிகர்கள்தான் காரணம் என்றும் கூறி விமர்சனத்தில் சிக்கியவர் சுதா கொங்கரா என்பதும் குறிப்பிடத்தக்கது.





