நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (கோட்) என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்னும் ஒரு மாதத்தில் அதாவது மார்ச் 31 உடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது. அதன்பிறகு அவர் ஏப்ரல் மாதத்தில், தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை பிரமாண்டமாக மதுரையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.
கோட் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் சில மாதங்கள் நீடிக்கும் நிலையில் விஎப்எக்ஸ் மற்றும் டீ ஏஜிங் தொழில்நுட்ப பணிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்க உள்ளது. டைம் டிராவல் கதை என்பதால் இந்த பணிகள் மிக நுட்பமாக இருந்தால் மட்டுமே ரசிக்க முடியும் என்பதால், லாஸ் ஏஞ்சல் செல்லும் படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு அந்த பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
முதலில் ஜூன் 13 அல்லது ஜூன் 22ல் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், பெஸ்டிவல் படமாக ஆகஸ்ட் 15 அல்லது, தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், ஆகஸ்ட் 15ல், புஷ்பா 2 படமும், தீபாவளிக்கு வேட்டையன் படமும் ரிலீஸ் ஆக இருப்பதால், அதற்கிடையே ஏதாவது ஒரு நாளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
நடிகர் விஜய் திருமலை படத்தில் இருந்துதான் ஆக்சன் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதற்கு முன்பு வரை, விஜய் நடித்த படங்கள் பெரும்பாலும் காதல் கதைகளாக தான் இருந்தன. அந்த வகையில் லவ்டுடே, பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, பிரியமானவளே, பிரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும், குஷி போன்ற பல படங்கள் காதல் கதைகளாக தான் இருந்தன.
அந்த வகையில் நடிகர் விஜய், முதலில் காதல் நாயகனாக தான் ரசிகர்களை கவர்ந்தார். அதனால் விஜய் நடித்த காதல் படங்களை இப்போதும் ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். அந்த வகையில் காதல் குறித்து விஜய் பேசும் ஒரு படத்தின் காட்சி வைரலாகி வருகிறது. அதில் நடிகர் விஜய் காதல் என்றால் புரிதல். ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்வதற்கு பெயர்தான் காதல், என்று பேசியிருக்கிறார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய், காதல் படங்கள் என்ற ஜானர் மாறி ஆக்சன் ஹீரோவாக பல படங்களில் நடித்து விட்டார். இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கி விட்டார். வரும் 2026ம் ஆண்டில் தமிழக சட்டசபை தேர்தலில், முதலமைச்சர் பதவிக்கு குறிவைத்து போட்டியிடப் போகிறார். ஆனால் இன்னமும் ரசிகர்கள், விஜயை காதல் நடிகராக மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அரசியல் தலைவராக பார்த்து ஓட்டுப் போடுவார்களா, என்று சமூக வலைதளங்களில் கலாய்த்த வருகின்றனர்.





