- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் ஸாரி கேட்கணும்னா, அது இமான் கிட்டதான் கேக்கணும், அவர்கிட்ட எப்பவும் ஒரு பயம் இருந்துக்கிட்டே...

நான் ஸாரி கேட்கணும்னா, அது இமான் கிட்டதான் கேக்கணும், அவர்கிட்ட எப்பவும் ஒரு பயம் இருந்துக்கிட்டே தான் இருக்கும் – நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னுக்கு வந்தவர். ஆனால் அதற்கு பின்னால் அவரது கடுமையான உழைப்பும், திறமையும் இருந்ததையும் மறுக்க முடியாது. சினிமா சார்ந்த எந்த பின்புலமும் இல்லாமல், சினிமாத்துறைக்குள் வந்து சாதித்தவர்களில் ரஜினி, விஜயகாந்த், அஜீத்குமார் போல, சிவகார்த்திகேயனும் ஒருவர்.

விஜய் டிவியில் ஆங்கராக இருந்த அவரை, நடிகரமாக மாற்றியது இயக்குனர் பாண்டிராஜ்தான். மெரினா படத்தில் சிவகார்த்திகேயனை நாயகனாக நடிக்க வைத்தார். இதில் அவருக்கு ஜோடியாக ஓவியா நடித்தார். தொடர்ந்து எதிர்நீச்சல், மனம் கொத்தி பறவை போன்ற படங்கள் சிவகார்த்திகேயனை. ரசிக்க வைத்தது.

- Advertisement -

அடுத்து பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்கள், சிவகார்த்திகேயனை வெற்றிப் பட நாயகனாக மாற்றியது. இந்த படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து பிரபலமானார் நடிகர் சூரி. இந்த படங்களின் மூலம் சிவகார்த்திகேயன், சூரி இருவருமே தமிழ் சினிமாவில் முக்கிய இடங்களுக்கு வந்துவிட்டனர்.

தொடர்ந்து வேலைக்காரன், காக்கிச்சட்டை, நம்ம வீட்டுப் பிள்ளை, டாக்டர் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன், முன்னணி நாயகனாக மாறினார். இந்த சூழலில் இசையமைப்பாளர் டி இமான், நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பேசி, அவர் வெளியில் சொல்ல முடியாத ஒரு துரோகத்தை செய்துவிட்டார், அவரது படங்களுக்கு இந்த ஜென்மத்தில் இசையமைக்க மாட்டேன் என்று கூறியது, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

- Advertisement -

ஏனெனில் சிவகார்த்திகேயன் நடித்து வெற்றி பெற்ற பல படங்களுக்கு இசையமைத்தவர் டி இமான்தான். வெளியில் சொல்ல முடியாத துரோகம், அதை என் பிள்ளைகளின் நலன் கருதி சொல்ல முடியவில்லை என்றும் டி இமான் வேதனையுடன் பேசியது, சிவகார்த்திகேயனின் இமேஜை பாதியாக இடித்து நொறுக்கி விட்டது. இன்று வரை அதற்கு சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து மறுப்போ, விளக்கமோ இல்லை.

இந்நிலையில், இந்த விவகாரம் ஏற்படுவதற்கு முன், பழைய நேர்காணல் ஒன்றில் சிவகார்த்திகேயன் பேசியது இப்போது வைரலாகி வருகிறது. அதில் சிவகார்த்திகேயன் கூறுகையில், நான் ஸாரி சொல்லலணும்னா அது இமான் அண்ணாவுக்கு தான் சொல்லணும். நான் படங்களில் கொஞ்சம் பிஸியாக இருக்கறதால், அவரை நேர்ல பார்க்க முடியலை, பேச முடியலை. அது அவருக்கும் அப்செட் ஆயிடுச்சு. நான் அவரை அண்ணா என்பேன். அவர் என்னை தம்பி என்பார். அது ஒரு நாகரிகமான ரிலேசன்ஷிப். எந்த ஒரு ஈகோவும் இருக்காது. அவர் மீது அண்ணன் என்ற ஒரு பயம், எப்போதும் எனக்கு இருந்துக்கொண்டே தான் இருக்கும், என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்