- Advertisement -
Homeபொழுதுபோக்கு2012ல் சினிமா பின்புலம் இல்லாமல் நடிக்க வந்தவங்க நாங்க 2 பேர் மட்டும்தான், 80 சதவீதம்...

2012ல் சினிமா பின்புலம் இல்லாமல் நடிக்க வந்தவங்க நாங்க 2 பேர் மட்டும்தான், 80 சதவீதம் பேர் சினிமா குடும்பத்துல இருந்து வந்தவங்க தான் – வெளிப்படையாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்

- Advertisement -

சமீபத்தில் நடந்த ரசிகர்கள் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, என்னை செல்ஃப் மேட் என்று சொன்னீர்கள். கண்டிப்பாக நான் செல்ஃப் மேட் கிடையாது. என்னை உருவாக்கியது மக்கள். மக்களால் உருவாக்கப்பட்டவன் நான். நான் 2012ம் ஆண்டில் சினிமாவுக்குள் வந்த போது நானும் விஜய் சேதுபதியும் மட்டும்தான் வெளியில் இருந்து வந்தவர்கள்.

சினிமா குடும்பம் சினிமா பின்னணி இல்லாமல் உள்ளே வந்தவர்கள். அப்போது இருந்த 80 சதவீதம் பேர் ஜெனரேசன் வந்து சினிமா குடும்ப பின்னணியில் இருந்துதான் வந்திருந்தாங்க. டிவியில் இருந்து ஒருவர் எப்படி ஹீரோவா வரலாம்? ஆங்கர் எப்படி ஹீரோ ஆகலாம்? மிமிக்ரி எப்படி ஹீரோ ஆகலாம்? என்று இருந்தது.

ஆனா மக்கள் அந்த கேள்வியை கேட்டதே இல்லை. நம்மில் ஒருத்தன் ஏன் ஹீரோ ஆகக்கூடாது என்று கேள்வி கேட்டு கைதட்டி என்னை மேல கூட்டீட்டு வந்தீங்க.இப்படி நம்மை உயர்த்தி விட்ட மக்களுக்கு இந்த இடத்தில் இருந்து ஏதாவது செய்யணும் என்றுதான் என் அப்பா பெயரில் ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சேன். சில உதவிகள் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். சில உதவிகள் தெரியாமல் அதை திருப்திக்காக பண்ணிட்டு இருக்கோம்.

ஆனால் நான் ஒருத்தன் மட்டுமே தமிழ்நாடு, தமிழ்நாடு தாண்டி நான் செய்துவிட முடியாது. அதற்கு அந்த பலம் வேண்டும். அந்த பலம்தான் ரசிகர்களாகிய நீங்கள். நீங்கள் கொடுத்த அந்த அன்பு, இப்போ நீங்க என்னென்ன எல்லாம் பண்ணீட்டு இருக்கீங்க என்று பார்க்கும் போது படத்தோட ரிலீஸ் செலிபிரேசன் பார்க்கும் போது மிரட்டிடறீங்க. பர்ஸ்ட் டே செலிபரேசன் வந்து எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கும்.

அவ்வளவு விஷயங்கள் பண்ணிட்டே பண்ணிட்டே இருப்பீங்க. என்னோட பிறந்த நாள் என்பது நீங்கள் பண்ற நல்ல விஷயங்களால் நிறைய பேருக்கு தெரியும். இன்னிக்கு அதை பார்த்தோம். உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்று சொல்வாங்க. நிறைய பேருக்கு கல்வி மருத்துவம் விளையாட்டுன்னு நிறைய உதவிகள் செஞ்சுக்கிட்டே இருக்கீங்க. இது எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷலா இருக்கு.

இது நிறைய இயக்கங்கள், நிறைய மன்றங்களில் செய்றது தானே என்று கேட்டுக்கிட்டு இருக்கும் போதுதான் நீங்க ஒண்ணு செஞ்சீங்க? நாள்தோறும் ஒரு நற்பணி செய்வோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாவட்டம் தொகுதி ஒன்றியம் நகரம் அப்படீன்னு ஒவ்வொரு நாளும் உங்களால் இயன்றதை மக்களுக்கு செய்றீங்க என்ற போது ஆச்சரியமாக இருந்தது. அதற்கு ஹாட்ஸ் ஆப் என்று நடிகர் சிவகார்த்திகேயன் அந்த கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

சற்று முன்