- Advertisement -
Homeபொழுதுபோக்குமற்ற நடிகர்களின் ரசிகர்களை நான் திருட முயற்சிக்கிறேனா? - மதராஸி பட விழாவில் வெளிப்படையாக பேசிய...

மற்ற நடிகர்களின் ரசிகர்களை நான் திருட முயற்சிக்கிறேனா? – மதராஸி பட விழாவில் வெளிப்படையாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் அபரிமிதமான ஒரு வளர்ச்சியை பெற்ற ஹீரோ நடிகர் ஒருவர் சிவகார்த்திகேயன்தான். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் மெரினா படத்தில் சிவகார்த்திகேயன் அறிமுகமான போது அவர் ஹீரோவாக நடிக்க வாங்கிய சம்பளம் ரூ. 10 ஆயிரம். ஆனால் இப்போது அவரது 25வது படம் பராசக்தியில் அவரது சம்பளம் ரூ. 70 கோடி என்று சொல்லப்படுகிறது.

மிக கடுமையான உழைப்பும் திறமையும் அதே நேரத்தில் வெற்றிகளை தன்வசப்படுத்திக்கொள்ளும் சாதுரியமும்தான் இதற்கு முக்கிய காரணம். அதே நேரத்தில் காமெடி கலந்த காதல் படங்களில் ஆரம்பத்தில் நடித்த பின்னர், ஆக்சன் ஹீரோவாக தன்னை மாற்றிக்கொண்டார் சிவகார்த்திகேயன். குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் சீமராஜா வேலைக்காரன் டாக்டர் மாவீரன் அமரன் போன்ற படங்கள் அவருக்கு அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்த்தின.

- Advertisement -

இப்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ருக்மணி வசந்த் வித்யூத் ஜம்வால் உள்ளிட்டோர் நடித்த மதராஸி படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினார்.

இந்த விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், தன்னை பற்றிய பல விமர்சனங்களுக்கு பதில் அளித்து பேசினார். விஜயும் நானும் அண்ணன் தம்பி மாதிரிதான். விஜய் கையில் துப்பாக்கி வாங்கியதால் நான் குட்டி தளபதி ஆகிவிட முடியாது. அப்படி நினைத்திருந்தால் அப்படி துப்பாக்கி வாங்கும் காட்சியில் நான் நடித்தே இருக்க மாட்டேன் என்று வெளிப்படையாக பேசினார்.

- Advertisement -

மேலும் இந்த விழாவில் ஒரு முக்கியமான விஷயம் குறித்து, தன்னை பற்றிய ஒரு விமர்சனம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் வெளிப்படையாக பேசியதாவது, தளபதி விஜய் சாரின் ரசிகர்களை நான் திருட முயற்சிக்கிறேன் என்று பலர் சொல்கிறார்கள். ஆனால் ரசிகர்கள் ஒரு பரிசு அல்ல. அவர்களை யாராலும் திருட முடியாது.

ரஜினி சார் கமல் சார் விஜய் சார் அஜீத் சார் சூர்யா சார் விக்ரம் சார் சிம்பு சார் மற்றும் தனுஷ் சார் ஆகியோர் பல ஆண்டுகளாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சம்பாதிக்க கடுமையாக உழைத்தனர். அதே போல் நானும் இன்னும் நல்லமுறையில் நடித்து என் ரசிகர்களை சம்பாதித்து வருகிறேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் இந்த விழாவில் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்