- Advertisement -
Homeபொழுதுபோக்குபோர்ச்சுக்கல் நாட்டில் ஜாலியாக ஹனிமூன் கொண்டாடி வரும் நட்சத்திர ஜோடி - புத்தாண்டிலும் அங்கே தானா…?...

போர்ச்சுக்கல் நாட்டில் ஜாலியாக ஹனிமூன் கொண்டாடி வரும் நட்சத்திர ஜோடி – புத்தாண்டிலும் அங்கே தானா…? பெருமூச்சு விடும் இளம் ரசிகர்கள்!

- Advertisement -

திருமணம் முடிந்த ஓரிரு தினங்களில் புதுமணத் தம்பதி வெளியூர்களுக்கு ஹனிமூன் கொண்டாட செல்வது வழக்கம். ஓரளவு வசதிபடைத்தவராக இருந்தால் ஊட்டி கொடைக்கானல் மூணார் கேரளா என்று செல்வார்கள். ஆனால் நடிகர் நடிகைகளாக இருந்தால் அவர்கள் தேர்வு செய்வது வெளிநாடுகளை தான்.

அந்த வகையில் இப்போது சமீபத்தில் 2வது திருமணம் செய்துக்கொண்ட நடிகை சமந்தா தனது கணவருடன் கடந்த சில வாரங்களாக தேனிலவு கொண்டாடி வருகிறார். ஆனால் திருமணத்துக்கு முன்பே அவர் காதல் ஜோடியாக இருந்த போதே பல வெளிநாடுகளில் ஒன்றாக சுற்றித் திரிந்த புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் ஏற்கனவே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்த நிலையில் 2017ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் 2021ம் ஆண்டில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். கடந்தாண்டில் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை 2வது திருமணம் செய்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வெப் சீரிஸ் இயக்குனர் ராஜ் நெடிமூரு – நடிகை சமந்தாவின் திருமணம் கடந்த டிசம்பர் 1ம் தேதி கோவையில் ஈஷா மையத்தில் நடந்தது. அவர்கள் இருவரும் இப்போது தேனிலவை கொண்டாட போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள லிஸ்பன் என்ற பகுதிக்கு சென்றுள்ளனர். இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தையும் அவர்கள் அங்குதான் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

இதற்கிடையே போர்ச்சுக்கல் நாட்டில் தாங்கள் சென்ற சுற்றுலா தலங்கள் மற்றும் ஓட்டல்களில் உணவருந்தும் புகைப்படங்களை நடிகை சமந்தா தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டு ஷேர் செய்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் தேனிலவு கொண்டாடும் நட்சத்திர தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகை சமந்தா – ராஜ் நெடிமூரு இருவருக்கும் இது 2வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு அவர்கள் இருவரும் தி பேமிலி மேன் 2, சிட்டாடல் ஹனி பன்னி போன்ற வெப் தொடர்களில் ஒன்றாக இணைந்து பணியாற்றி உள்ளனர். இப்போது மீண்டும் அவர்கள் இணைந்து ஒரு படத்தை தயாரித்து வருகின்றனர். போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள லிஸ்பன் பகுதியில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் சந்தோஷத்தில் இருக்கும் நடிகை சமந்தா அவரது கணவர் ராஜ் நெடிமூரு ஜோடியாக உள்ள புகைப்படங்கள் இணையத்தில் இப்போது வைரலாகி வருகின்றன.

- Advertisement -

சற்று முன்