நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வரும் 10ம் தேதி வெளியாக உள்ளது. அதற்கு முந்தைய நாள் 9ம் தேதி விஜய் நடித்த விஜய் நடித்த ஜனநாயகன் படம் வெளியாக உள்ளது. இந்த 2 படங்களும் பொங்கல் களத்தில் மோதுவது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே நேற்று சென்னையில் பராசக்தி படம் இசை வெளியீட்டு விழா நடந்தது.
இந்த விழாவில் படத்தின் நாயகன் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, நாங்கள் முதலில் பராசக்தி படத்தை தீபாவளிக்கு தான் பிளான் பண்ணினோம். விஜய் அண்ணா படம் அக்டோபர் என்று சொன்னதும் நாம் பொங்கலுக்கு போயிடலாம் என்று தயாரிப்பாளரிடம் சொல்லி அதற்கு ஏற்றவாறு பிளான் பண்ணினோம்.
ஆனால் திடீரென ஜனநாயகன் படமும் பொங்கலுக்கு வருது என்று சொன்னதும் நான் உடனே ஜெர்க் ஆயிட்டேன். தயாரிப்பாளரோ நம்ம இன்வெஸ்ட்டருக்கு எல்லாம் பொங்கல் ரிலீஸ் என்று சொல்லிட்டோம். இதுக்கு மேல புஷ் பண்ணினால் சம்மருக்குதான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்று சொன்னார். மேலும் அப்போது எலக்சன் வேற வருது. அதனால் நான் பொங்கலுக்கு ரிலீஸ்க்கு ஓகே சொல்லிட்டேன்.
ஆனால் ஏதோ ஒன்று எனக்கு டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்தது. உடனடியாக விஜய் சார் மேனேஜர் ஜெகதீசுக்கு போன் போட்டேன். பொங்கலுக்கு தாராளமா வரலாம் என்று அவர் சொல்லிவிட்டார். உங்களுக்கு பிரச்சனை இல்லை, எனக்கு தான். நீங்க ஒருவாட்டி விஜய் சாரிடம் பேசுங்க என்றேன். விஜய் சாரிடம் அவர் பேசிவிட்டு லைன்ல வந்தார்.அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லை. சூப்பரா பொங்கலுக்கு வரட்டும்.
எஸ்கேவுக்கு என் வாழ்த்துகளை சொல்லிடுங்கன்னு விஜய் சொன்னாருன்னு ஜெகதீஷ் சொன்னார். 33 வயது வருஷமாக ஒரு மனிதர் நம்ம எல்லாரையும் என்டர்டைன் பண்ணிட்டு இருக்கார். அதனால ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் பாருங்க ஜனவரி 10ம் தேதி பராசக்தி படத்தை பாருங்க. செலிப்ரேட் பண்ணுங்க யார் என்ன வேணாலும் சொல்லட்டும். நான் சொல்றேன். இது அண்ணன் தம்பி பொங்கல் தான் என்று நடிகர் சிவகார்த்திகேயன் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.
சிவகார்த்திகேயனை பொருத்த வரை ஜனநாயகன் படம் வரும்போது பராசக்தி படமும் வருவதால் விஜய்க்கு எதிரானவர் போல சித்தரிக்கப்படும் நிலையில் அவர் நானும் விஜயும் அண்ணன் தம்பி என்று உணர்வுபூர்வமாக பேசியிருக்கிறார். அதனால் அரசியல் காரணங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால் விஜய் மீது சிவகார்த்திகேயன் அதிக மதிப்பு கொண்டிருப்பதாக தெரிகிறது. அதனால் இனி விஜய் ரசிகர்கள் கூல் ஆகிவிட அதிக வாய்ப்புள்ளது.





