- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் ரசிகர்கள் பராசக்தி படத்துக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்களா? - இயக்குனரின் குற்றச்சாட்டுக்கு சிவகார்த்திகேயன் சொன்ன...

விஜய் ரசிகர்கள் பராசக்தி படத்துக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்களா? – இயக்குனரின் குற்றச்சாட்டுக்கு சிவகார்த்திகேயன் சொன்ன நேரடியான பதில்!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் கடந்த 10ம் தேதி ரிலீஸாகி தியேட்டர்களில் கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் ஓடி வருகிறது. இந்த படம் 2 நாளில் ரூ. 51 கோடி ரூபாய் உலகளவில் வசூலித்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ஆனால் படம் வெளியான தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டமே சுத்தமாக இல்லை என்றும் தகவல் பரவி வருகிறது.

இதற்கிடையே ஆங்கில டிவி ஒன்றில் நேர்காணலில் பங்கேற்ற படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா, பராசக்தி படத்தின் மீது பொய்யான வதந்திகளை விஜய் ரசிகர்கள் பரப்பி விடுகின்றனர். அந்த படத்தின் வெற்றிக்கு இடையூறாக அவதூறு செய்கின்றனர். ரவுடிகள் குண்டர்கள் போல செயல்படும் அவர்களையும் நாங்கள் சமாளித்தாக வேண்டியிருக்கிறது என்று ஆவேசமாக கூறியிருந்தார்.

இது விஜய் ரசிகர்களை மட்டுமின்றி பொதுவான சினிமா ரசிகர்களையும் எரிச்சலடைய செய்தது. ஒரு படம் நன்றாக இருந்தால் யாருடைய தவறான விமர்சனமும் அங்கு நிற்காது. படம் பார்த்த ரசிகர்கள் வேண்டும் என்றே ஒரு படத்தை குறை கூற வேண்டிய அவசியம் இல்லை. பராசக்தி படம் ஒரு காட்டு மொக்கை படம் என்பது ஊரறிந்த உண்மை. அதை மறைத்துவிட்டு அவர் பேசுகிறார் என்கிற விமர்சனங்களும் ரசிகர்களிடம் எழுந்தது.

பராசக்தி படத்தை பொருத்த வரை இந்தி திணிப்பு எதிரான படம் என்று சொன்னாலும் படத்தில் காதல் காட்சிகளும் டூயட்டும் வருகின்றன. இந்தியை எதிர்க்கும் நாயகன் காதலிக்காக தெலுங்கு கற்பது காமெடியாக உள்ளது. தவிர வில்லனாக வரும் நடிகர் ரவி மோகனின் நடிப்பு மட்டுமே மனதில் நிற்கிறது என்று படம் பார்த்த ரசிகர்கள் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

வெற்றிக்கு தகுதி பெறாத ஒரு படத்தை இயக்கி விட்டு விஜய் ரசிகர்களால்தான் பராசக்தி படம் அவதூறு பரப்பியதால் ஓடவில்லை என்று இயக்குனர் சுதா கொங்கரா கூறுவது வேடிக்கையானது. அவரது இயக்கம் பற்றிய குறைகளை சுய பரிசோதனை செய்யாமல் மற்றவர்கள் மீது பழியை போடுகிற ஒரு தவறான போக்கு என்றும் ப்ளு சட்டை மாறனும் ஒரு பதிவில் கூறியிருந்தார். இதற்கிடையே நேற்று டெல்லிக்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயனிடம், பராசக்தி படம் குறித்து விஜய் ரசிகர்கள் அவதூறு பரப்புகிறார்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது, இல்லை. ஒரு சில ரசிகர்கள் அப்படி பேசுகிறார்கள். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எல்லோரும் பேசுகிறார்கள் என்று பொதுவாக சொல்லிவிட முடியாது. நாங்கள் எப்போதும் சகோதரர்கள் போலவே இருக்கிறோம். அது அப்படியே தொடரும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார். ஒட்டுமொத்தமாக விஜய் ரசிகர்கள்தான் பராசக்தி படம் தோல்விக்கு காரணம் என்கிற இயக்குனர் சுதா கொங்கரா கூறிய கருத்தை அவரது படத்தின் நாயகனே ஏற்கவில்லை என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சற்று முன்