- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த வித்தையை நடிகர் சூரிக்கும் சொல்லிக் கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன், அப்போ புரியலே இப்போ...

அந்த வித்தையை நடிகர் சூரிக்கும் சொல்லிக் கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன், அப்போ புரியலே இப்போ புரியுது – நான் பரோட்டா சூரி இல்லேன்னு சொல்ல காரணம் இதுதானா?

- Advertisement -

பல ஆண்டுகளுக்கு முன்பு வரை எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்றவர்கள் சினிமாவில் அறிமுகமாகி நடிகர்களாக வளர்ந்த காலத்தில் ஹீரோக்களாக படங்களில் தங்களது பயணத்தை துவங்கிய கால கட்டத்தில் ரசிகர்கள் அவர்களது படங்களை விளம்பரப்படுத்தினர்.

ஒரு படம் ஹிட் ஆவதும் அந்த படம் பிளாப் ஆவதும் படம் பார்த்த ரசிகர்களின் பார்வையில் இருந்தது. இதில் எந்த ஹீரோ எந்த டைரக்டர் என்ற எந்த பாரபட்சமும் இல்லாமல் ஒரு படம் கமர்ஷியலாகவும் ரசிக்கும்படியான கதைக்களத்திலும் இருந்தால் அந்த படம் ஹிட் தான். அதை ரசிகர்களே முடிவு செய்தார்கள். அவர்களது ரசனைக்கு உரிய படங்கள் வெற்றியை பெற்றன.

- Advertisement -

ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் சமூக வலைதளங்கள் இருக்கின்றன. இணையத்தில் பரப்பப்படும் தகவல்களின் அடிப்படையில் ஒரு மொக்கையான படம் சூப்பர் ஹிட் என்று புகழப்படுகிறது. ஒரு நல்ல திரைப்படம் சுமாரான படம்தான் என்றும் இணையத்தில் தகவல் பரப்பபடுகிறது.

குறிப்பாக ஹீரோக்களின் புகழ் பாட அந்த காலத்தில் ரசிகர்கள் மன்றங்கள் தோரணங்கள் கட்டினர். போஸ்டர்களை ஒட்டினர். தியேட்டர்களின் முன்பு உயரமான கட் அவுட்டுகளை வைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். ஆனால் இப்போது இணையதளங்களில் ஹீரோக்களை உச்சத்துக்கு கொண்டு சென்று விடுகின்றனர்.

- Advertisement -

அந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு என ஒரு ஐடி விங் வைத்திருக்கிறார். இணைய கூலிப்படை என்று திரை விமர்சகர்களால் கூறப்படும் இந்த ஐடி விங்க் மூலம் சிவகார்த்திகேயனின் படங்கள் அது குறித்த அப்டேட்ஸ் மற்றும் அவர் பங்கேற்கும் நிகழ்வுகள் என அனைத்தும் இணையத்தில் வைரலாக்கப்பட்டு அவரை எப்போதும் புகழ் வெளிச்சத்தில் வைத்திருக்கிறது.

இப்போது அந்த வித்தையை தனது நெருங்கிய நண்பர் புதிய ஹீரோ நடிகர் சூரிக்கும் சிவகார்த்திகேயன் கற்றுக்கொடுத்து விட்டார். இப்போது நடிகர் சூரிக்கும் தனியாக ஐடி விங்க் உள்ளது. அதுதான் சமீப நாட்களாக மண்டாடி படம் ரிலீஸில் இருந்து சூரியின் புகழ்பாடும் அதிக பதிவுகள் இணையத்தில் வலம் வருகின்றன. இந்த அளவுக்கு புகழ் வந்த பிறகு தன்னை பரோட்டா சூரி என்று சொல்வது அவமானம் என்று கருதிதான், சூரி அதற்கு எதிர்ப்பு தெரிவி்தது பேசியது இப்போது ரசிகர்களுக்கு புரிந்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்