- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதிமுக திமுக பிடிக்காமல் தான் மக்கள் விஜய்க்கு ஓட்டுப் போட்டனர் - திமுக ஆதரவாளர் சத்யராஜ்...

அதிமுக திமுக பிடிக்காமல் தான் மக்கள் விஜய்க்கு ஓட்டுப் போட்டனர் – திமுக ஆதரவாளர் சத்யராஜ் முன்னிலையில் விஜயை புகழ்ந்த சீனியர் நடிகர் சிவக்குமார்!

- Advertisement -

கோவையில் இன்று நடந்த தனியார் மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் மூத்த நடிகர் சிவக்குமார் மற்றும் நடிகர் சத்யராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டனர். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் நடிகர் சத்யராஜ் பேசுகையில், உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி மிகவும் அவசியம்.

மனதை மகிழ்ச்சியாக எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டும். போதை பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விலக வேண்டும். விஜய் அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கூறியது பாராட்டுக்குரியது என்றார். அப்போது டாக்டர் பக்தவச்சலம் நடிகர் சிவக்குமார் உடனிருந்தனர்.

- Advertisement -

தொடர்ந்து சீனியர் நடிகர் சிவக்குமார் பேசியதாவது, என்னுடைய ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணம் ஒழுங்கான வாழ்க்கை முறை தான். பல ஆண்டுகளாக காஃபி டீ குடிக்காமல் வாழ்ந்து வருகிறேன். இந்த காலத்தில் குடும்பத்தினர் அனைவரும் செல்போனில் மூழ்கி தனித்தனியாக இருக்கிறார்கள். செல்போனை விட்டுவிட்டு குடும்பத்துடன் அமர்ந்து பேச வேண்டும். நண்பர்களுடன் மனம் திறந்து பேசுவது மனநலத்திற்கு நல்லது.

எனக்கு இப்போது 85 வயது ஆகிறது. தினமும் நண்பர்களுடன் நீண்ட நேரம் பேசுவேன். அரசியலைப் பொறுத்தவரை காமராஜர் 9 வருடம் சிறையில் இருந்தார். 9 வருடம் நாட்டை ஆட்சி செய்தார். அவர் சாகும்போது தலைமாட்டில் 140 ரூபாயும் 2 ஜோடி செருப்பு 4 ஜோடி சட்டைகள் ஐந்தாறு புத்தகங்கள் மட்டுமே இருந்தன. இதுதான் அவரது மொத்த சொத்து. இப்படி ஒரு தலைவரை பார்க்க முடியுமா? அப்படிப்பட்ட காமராஜரையே மக்கள் தோற்கடித்தார்கள்.

- Advertisement -

ஏனென்றால் அப்போது காமராஜர் தேவையில்லை. மாற்றம் வேண்டும் என்றார்கள். இன்று திமுக அதிமுக பிடிக்காமல் தான் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள். யார் வேண்டுமென்று மக்கள் தான் முடிவு செய்கிறார்கள். மக்கள் தான் நீதிபதிகள். மக்கள் அப்படி முடிவு செய்தால் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். 90 சதவீதம் முதல் முறையாக ஓட்டு போடுகிறவர்கள் காசு வாங்காமலேயே ஓட்டு போட்டுள்ளனர். என்னுடைய பேரன் பேத்திகள் ஓட்டு போடுகிறார்கள். அவர்கள் தான் இனி வருங்காலம்.

அவர்கள் தங்கள் தலைவனை தேர்ந்தெடுக்கும் போது அதை தவறு என்று சொல்ல நீங்கள் யார்? விஜய் நல்லது செய்வார் என்று நம்புவோம் என்று நடிகர் சிவக்குமார் பேசினார். நடிகர் சிவகுமார் விஜய் குறித்து பேசும் போது நடிகர் சத்யராஜ் அருகிலேயே அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏனென்றால் சமீபத்தில் நடிகர் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்து பேசியவர் சத்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்