தமிழ் சினிமாவில், இப்போது புது டிரண்டிங் ஆக தான் இந்த விஷயம் பார்க்கப்படுகிறது. அதாவது, முக்கிய நடிகர் நடிக்கும் படத்தில் மற்ற நடிகர்கள் இணைந்து நடிப்பது. அது தமிழ் நடிகர்களாக மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பிறமொழி நடிகர்களும் நடிக்கின்றனர்.
குறிப்பாக விக்ரம் படத்தில் கமலுடன் பகத் பாசில், சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இணைந்து நடித்தனர். லியோ படத்தில் சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் மேனன், அனுராக் காஷ்யப், மிஷ்கின் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அதே போல், ஜெயிலர் படத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
அதே போல் இப்போது விஜய் 68 படத்திலும் இதே போல் விஜய் உடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. தசெ ஞானவேல் இயக்கும் ரஜினி 170 படத்திலும் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படி பல நட்சத்திரங்கள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது, இப்போது லேட்டஸ்ட் பேஷனாக மாறிவிட்டது.
கமல்ஹாசன் இப்போது, இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் படத் தயாரிப்பு நிறுவனம், கமல் 233 படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குநர் எச் வினோத்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன், பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார்.
இவர் ஏற்கனவே, ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நண்பராக நடித்திருந்தார். இவர் சில காட்சிகளே படத்தில் வந்தாலும், செம மாஸ் காட்டியிருந்தார். குறிப்பாக கடைசி காட்சியில் ரம்யாகிருஷ்ணன், மருமகளை காப்பாற்ற அவர் வருவது பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஜெயிலர் படத்தை தொடர்ந்து கமல்ஹாசனுடன் சிவராஜ்குமார் நடிப்பது உறுதியாகி விட்டது.
சிவராஜ்குமார், ஜெயிலர் படத்தை தொடர்ந்து தனஷ் நடிக்கும் அவரது 50வது படமான கேப்டன் மில்லர் படத்தில் நடித்து இருக்கிறார். இப்போது கமல்ஹாசனின், கமல் 233 படத்திலும் சிவராஜ்குமார் நடிப்பது உறுதியாகி விட்டது. இனி அடுத்தடுத்து தமிழ் படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது. அதுவும் ரஜினியை தொடர்ந்து கமல் படத்தில் சிவராஜ்குமார் நடிக்க இருப்பது, பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.





