- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்க இருந்த படம் டிராப்…...

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்க இருந்த படம் டிராப்… அந்த படம் உருவாக வாய்ப்பே இல்லை – சுடச்சுட வெளியான லேட்டஸ்ட் தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர் சி. நிச்சயமாக சுந்தர் சி இயக்கிய படம் என்றால் வணிக ரீதியாக வெற்றிதான் என்பது தமிழ் சினிமாவின் நம்பிக்கை. காதல் காமெடி கவர்ச்சி சென்டிமென்ட் என ஒரு படத்தை ரசிகர்கள் விரும்பும் கதைக்களத்தில் தருவது சுந்தர் சியின் ஸ்பெஷாலிட்டி. அதனால் தொடர்ந்து அவர் இயக்குனராக ஜெயித்துக்கொண்டே இருக்கிறார்.

இப்போது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ரூ. 120 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர் சி டைரக்ட் செய்து வருகிறார். நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடித்து வருகிறார். இதில் சுந்தர் சி தான் கதாநாயகன். மேலும் துனியா விஜய் ரெஜினா கசாண்ட்ரா இனியா யோகிபாபு உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

மூக்குத்தி அம்மன் 2 படத்தை முடித்து விட்டு நடிகர் கார்த்தி நடிக்கும் ஒரு படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்குவதாக ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு பேசி முடிவு செய்யபப்ட்டது. முதன்முறையாக சுந்தர் சி இயக்கத்தில் கார்த்தி நடிப்பது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. நிச்சயமாக இது ஒரு மாஸ் ஹிட் படமாக அமையும் என்றும் கோலிவுட்டில் பேசப்பட்டது.

இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் முடிவு செய்யப்பட்ட நிலையில் இயக்குனர் சுந்தர் சிக்கு ரூ. 3 கோடி அட்வான்ஸ் தொகையும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. வரும் நவம்பரில் படப்பிடிப்பை துவங்கவும் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவில்லை. அந்த படம் டிராப் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் நடிகர் கார்த்திதான் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இப்போது நடிகர் கார்த்தி நடிப்பில் மார்ஷல் படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு சுந்தர் சி இயக்கும் படத்தில் கார்த்தி நடிப்பதாக இருந்தது. ஆனால் ஏற்கனவே கார்த்தி நடித்த வா வாத்தியார் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் சாட்டிலைட் ரைட்ஸ் வியாபாரம் இன்னும் ஆகவில்லை என்று தெரிகிறது.

மேலும் இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த சர்தார் 2 படமும் இன்னும் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் முடங்கி போய் கிடப்பில் உள்ளது. அதுவும் சாட்டிலைட் டிஜிட்டல் வியாபாரம் ஆகவில்லை என்கின்றனர். இப்போது மார்ஷல் படமும் ரெடியாகி விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படி 3 படங்கள் திரைக்கு வர வேண்டிய நிலையில் அடுத்ததாக 4வது படம் அவசியம்தானா, இத்தனை கோடிகளை செலவு செய்து படத்தை எடுக்க வேண்டுமா என்ற கோணத்தில் சிந்தித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், இந்த படத்தை டிராப் செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்