- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் பெண்ணாக இருந்தால் அவரை காதலித்திருப்பேன், பகிரங்கமாக சொன்ன பிரபல ஹீரோ - நல்லவேளை, தனுஷ்...

தனுஷ் பெண்ணாக இருந்தால் அவரை காதலித்திருப்பேன், பகிரங்கமாக சொன்ன பிரபல ஹீரோ – நல்லவேளை, தனுஷ் லேடீஸ் கெட்டப்ல இன்னும் நடிக்கலே

- Advertisement -

நடிகர் தனுஷ், தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன்களில் ஒருவராக இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மருமகனாக, அவரது மகள் ஐஸ்வர்யாவின் கணவராக இப்போது வரை இருந்து வருகிறார். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன், இயக்குனர் செல்வராகவனின் தம்பி என்ற அடையாளங்களை கொண்டவர்.

துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தனுஷ், இப்போது ராயன் என்ற தனது 50வது படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை அவரே டைரக்ட் செய்துள்ளார். அத்துடன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற காதல் கலந்த காமெடி படத்தையும் டைரக்ட் செய்துள்ளார்.

- Advertisement -

அத்துடன் தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில், பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அடுத்து, ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ள இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்திலும், இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார்.

தனுஷ் திறமையான நடிகர், நல்ல பாடகர், திரைப்பட தயாரிப்பாளர், இப்போது டைரக்டராகவும் மாறியிருக்கிறார். மேலும், நல்ல நடனத்திறமை கொண்டவராகவும் பல படங்களில் நடிகர் தனுஷ் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். தனுஷ் குறித்து, சக நடிகர்களில் ஒருவரான ஸ்ரீகாந்த சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

நடிகர் ஸ்ரீகாந்த் கூறியதாவது, நடிகர் தனுஷை பார்த்து நான் பொறாமைப்பட்டு இருக்கிறேன். நாங்கள் இருவரும் ஒருமுறை ஒன்றாக பணியாற்றினோம். அப்போது டான்ஸ் மாஸ்டர் இல்லாத நிலையில், அங்கிருந்த லேடி ஆர்ட்டிஸ்ட்களுக்கு தனுஷே டான்ஸ் சொல்லிக் கொடுத்தார். கொஞ்சம் கூட மாறாமல், ஒரே மாதிரி ஐந்து முறை நடனமாடி காட்டினார்.

அவருக்குள் இருக்கும் திறமையை அப்போதுதான் நான் நேரில் பார்த்தேன். அவர் பெண்ணாக இருந்திருந்தால், நான் அவரை காதலித்திருப்பேன், என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார். என்னதான் ஒருவரது திறமையை பாராட்டுவதாக இருந்தாலும், அதற்காக இப்படியா ஸ்ரீகாந்த் சொல்வது என நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர். நல்லவேளை, தனுஷ் லேடீஸ் கெட்டப்புல நடிக்கலே என்றும் கலாய்த்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்