- Advertisement -
Homeபொழுதுபோக்குகதை சொல்லி கதை சொல்லி தோத்து போயிட்டேன், 10க்கு 10 ரூம்ல தான் வாழ்க்கை, சினிமாவில்...

கதை சொல்லி கதை சொல்லி தோத்து போயிட்டேன், 10க்கு 10 ரூம்ல தான் வாழ்க்கை, சினிமாவில் என்னை பிரசவித்த கடவுள் அவர்தான் – இயக்குனர் கஸ்தூரி ராஜா நெகிழ்ச்சி!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் கஸ்தூரி ராஜா கூறியதாவது, நிறைய இடங்களில் கதை சொல்லி கதை சொல்லி நான் தோல்வி அடைஞ்சுட்டேன். இதுக்கு என்னடா பண்றதுன்னு யோசிச்சேன். அப்போ வீட்டுல 10க்கு 10 ரூம்ல தான் வாழ்க்கை. அப்பவே 4 புள்ளைங்க. அவங்க தூங்குனதுக்கு அப்புறம் டேப்ரெக்கார்டர்ல நானே கதையை சொல்லி அதை பதிவு செய்வேன். அது சாதாரணமாக கதை சொல்ற மாதிரி இருக்காது. ஒரு ஒலிச்சித்திரம் மாதிரி இருக்கும். அப்படியே கத்தி சிரிச்சு அழுது கதையை பேசி பதிவு செய்வேன், படம் பார்த்த மாதிரியே இருக்கும். இந்த கேசட்டை யார் கிட்ட கொடுக்கறதுன்னு இருந்தேன். சினிமாவில் என் வழிகாட்டி, சினிமாவில் என்னை பிரசவித்த கடவுள் திரு ராஜ்கிரண் அவர் வந்து கதை கேட்டார் என்று கஸ்தூரிராஜா நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

சற்று முன்