பழம்பெரும் நடிகை மனோரமா ஒரு முறை நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது தன்னுடன் பல படங்களில் காமெடி ரோலில் நடித்து நடிகர் நாகேஷ் குறித்து பேசி வருத்தப்பட்டார். இப்போது அவர் உடல் நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கலைஞர்களுக்கு மட்டும் முதுமையே வரக்கூடாது என்று ஆதங்கமாக பேசியிருந்தார். அவர் அன்று சொன்னது 100க்கு 100 சரி என்றே இப்போதும் ரசிகர்கள் கருதுகின்றனர்.
ஏனெனில் முதுமை காரணமாக பல நடிகர்கள் நடிகைகள் ரசிகர்களை விட்டு நிரந்தரமாக பிரிந்து சென்று விடுகின்றனர். மீளாத் துயரில் ரசிகர்களை ஆழ்த்தி விடுகின்றனர். பல நல்ல கலைஞர்களை தமிழ் சினிமா இழந்துக்கொண்டே இருக்கிறது. இது காலத்தின் கட்டாயமாக இருந்தாலும் இன்னும் சில ஆண்டுகள் அவர்களின் கலைச்சேவை தொடர்ந்திருக்கலாமே என்றுதான் ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
சூப்பர் குட் தயாரிப்பு நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்தவர் சுப்பிரமணி. அதனால் இவர் சூப்பர் ஹிட் சுப்ரமணி என்று தமிழ் சினிமா வட்டாரத்தில் அழைக்கப்பட்டவர். முண்டாசுப்பட்டி ஜெய்பீம் பிசாசு சூரரை போற்று ரஜினி முருகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக சூப்பர்ஹிட் சுப்ரமணி பல்வேறு படங்களில் போலீசாக, அப்பாவாக, கடை உரிமையாளராக பல குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். சில படங்களில் உதவி இயக்குனராகவும் அவர் பணியாற்றி இருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடிகர் சூப்பர் குட் சுப்ரமணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருக்கு புற்றுநோய் பாதிப்பு 4ம் நிலையில் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். தனது சிகிச்சைக்காக நிதி தேவை என்று தனக்கு 4ம் கட்ட புற்றுநோய் பாதிப்பு என்றும் அவர் பேட்டி கொடுத்து உதவி கேட்டார். இதையடுத்து பல நடிகர்கள் சினிமா கலைஞர்கள் அவருக்கு நிதி தந்து உதவி செய்தனர். புற்று நோயால் சிகிச்சை பெற்ற நிலையிலும் கமாண்டோவின் லவ் ஸ்டோரி என்ற படத்தில் சுப்ரமணி சமீபத்தில் டப்பிங் பேசினார். அதன் பின்னர் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில் அவர் மீண்டும் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மீண்டும் அட்மிட் செய்யப்பட்டார். கடந்த ஒரு வாரமாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். மறைந்த நடிகர் சுப்ரமணிக்கு மனைவி மகன் மகள் மற்றும் உள்ளனர். சமீபத்தில் தான் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல் நலக்குறைவால் காலமானார். மீண்டும் தற்போது சில தினங்களில் நடிகர் சூப்பர் ஹிட் சுப்ரமணி மறைவு தமிழ் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





