- Advertisement -
Homeபொழுதுபோக்குசென்னை ஈசிஆரில் புதிய வீடு கட்டி வரும் நடிகர் சூர்யா… மீண்டும் சென்னையில் செட்டில் ஆகப்...

சென்னை ஈசிஆரில் புதிய வீடு கட்டி வரும் நடிகர் சூர்யா… மீண்டும் சென்னையில் செட்டில் ஆகப் போகிறாரா? – வெளியான லேட்டஸ்ட் தகவல்!

- Advertisement -

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். இயக்குனர் வசந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தில் சூர்யா நடிகராக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் விஜயும் ஒரு நாயகனாக நடித்திருந்தார். அதன்பிறகு அமீர் இயக்கிய மௌனம் பேசியதே பாலா இயக்கிய நந்தா போன்ற படங்கள் சூர்யாவுக்கு நல்ல அடையாளத்தை தந்தன.

தொடர்ந்து காக்க காக்க கஜினி வாரணம் ஆயிரம் ஏழாம் அறிவு சிங்கம் அயன் என வெற்றிப் படங்களை தந்த சூர்யாவுக்கு கடந்த 10 ஆண்டுகளாக பெரிய அளவில் மாஸ் ஹிட் படங்கள் எதுவும் இல்லை. சமீபத்தில் வெளியான அவரது ரெட்ரோ படம் தியேட்டரிக்கல் நான் தியேட்டரிக்கல் என மொத்தம் 235 கோடி ரூபாய் வசூலித்து வியாபார ரீதியாக அதிக லாபம் தந்தது.

ஆனால் விமர்சன ரீதியாக ரெட்ரோ படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இப்போது கருப்பு என்ற படம் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா இந்த படத்தில் நடித்திருக்கிறார். அய்யனார் சாமி கதையாக இது உருவாகி உள்ளது. நாயகியாக திரிஷா நடித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கிறார். இதற்கிடையே நடிகர் சூர்யா, சென்னை ஈசிஆரில் ஒரு பிரமாண்டமான பங்களா வீடு கட்டிக் கொண்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நடிகர் சூர்யா தனது அம்மா பெயரில் மிகப்பெரிய அரண்மனை போன்ற வீட்டை சென்னை தி நகரில் கட்டியிருக்கிறார். அதில் சிவக்குமார் கார்த்தி சூர்யா என கூட்டுக்குடும்பமாக ஒவ்வொரு அடுக்கிலும் ஒரு குடும்பம் என வசித்து வந்தனர்.

இதற்கிடையே சில ஆண்டுகளுக்கு முன் நடிகை ஜோதிகா, தனது பிள்ளைகளின் கல்வி மற்றும் உடல் நலம் குன்றிய தனது பெற்றோரை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறிய நிலையில், மும்பையில் ஒரு நெரிய அபார்ட்மென்டில் சூர்யா ஜோதிகா குடும்பம் குடியேறியது. குடும்பத்துடன் அங்கு சூர்யா செட்டில் ஆகி விட்டார்.

இந்நிலையில் சூர்யா ஈசிஆரில் புதிய வீடு கட்டி வருகிறார். மும்பையில் குடியேறிய பிறகு சூர்யா, ஜோதிகா சென்னை வந்தால் தங்களது பழைய வீட்டுக்கு செல்லாமல், ஓட்டலில் தான் தங்கி வருகின்றனர். அதனால் இந்த புதிய வீட்டில் இனி சென்னை வந்தால் அவ்வப்போது தங்கிக்கொள்ள கட்டுகிறார்களா, அல்லது மிக விரைவில் மும்பையில் இருந்து குடும்பத்துடன் சென்னைக்கு வந்து புதிதாக கட்டப்படும் ஈசிஆர் வீட்டில் குடியேற போகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சற்று முன்