- Advertisement -
Homeபொழுதுபோக்குவாடிவாசல் படத்தில் நடிப்பதா, வேண்டாமா, தீர்மானிக்கப் போவது அந்த ஒரு விஷயம்தான், ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் சூர்யா...

வாடிவாசல் படத்தில் நடிப்பதா, வேண்டாமா, தீர்மானிக்கப் போவது அந்த ஒரு விஷயம்தான், ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் சூர்யா – இப்போதைய சூழல் மாறுமா?

- Advertisement -

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் இப்போது ஒரு முக்கிய இடத்தில் இருக்கிறார். கஜினி, சிங்கம், வேல், ஏழாம் அறிவு, ஜெய்பீம் போன்ற படங்களால் முன்னணி ஹீரோவாக வெற்றி பெற்ற சூர்யா இப்போது, மும்பையில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். ஜோதிகா ஏற்பாட்டில் இப்போது பாலிவுட் படத்தில் நடிக்க சூர்யா கமிட் ஆகி உள்ளார்.

பாலிவுட் மட்டுமின்றி, ஹாலிவுட் வாய்ப்பும் சூர்யாவுக்கு தேடி வந்திருக்கிறது. ஆங்கில படம் ஒன்றில் சூர்யா நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. வரும் 2024ம் ஆண்டில் ஆங்கில பட நாயகனாகவும் மாறப் போகிறார் சூர்யா. ரஜினிக்கு பிறகு ஆங்கில படத்தில் நடிக்கும் நடிகராகிறார் நடிகர் சூர்யா.

- Advertisement -

நடிகர் சூர்யாவை பொருத்த வரை நல்ல படங்களில், வித்யாசமான கேரக்டர்களில் நடிக்க ஆசைப்படுவார். குறிப்பாக அஜீத்குமார் நடிக்க மறுத்த கஜினி படத்தில் தானாக நடிக்க முன்வந்தவர் சூர்யா. அந்த மொட்டையடித்த மறதி நோயாளி கேரக்டரில் நடிக்க பலரும் மறுத்த போது சூர்யா துணிச்சலாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் பாராட்டை பெற்றவர்.

சமீபத்தில் வெளியான படங்களில் சூரரை போற்று படம் மட்டுமே நல்ல வரவேற்பை பெற்றது. எதற்கும் துணிந்தவன், தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே போன்ற படங்களை சூர்யா பெரிய அளவில் எதிர்பார்த்தார். ஆனால் இந்த படங்கள் பலத்த ஏமாற்றத்தை தந்தன. இருந்த போதிலும் சூர்யா இப்போது நடித்துவரும் கங்குவா படம் பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதற்கிடையே மார்ச் மாத துவக்கத்தில், இயக்குநர் வெற்றிமாறன் வாடிவாசல் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதில் சூர்யா, அமீர் நடிக்கும் காட்சிகளை எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். அதற்குள் பருத்திவீரன் பஞ்சாயத்து முடிவுக்கு வந்துவிட்டால் இருவரும் பரஸ்பரம் சங்கடங்கள் நீங்கி, இந்த படத்தில் ஒன்றாக நடிக்கும் ஒரு நல்ல சூழல் உருவாகும்.

பருத்திவீரன் படம் தயாரிப்பு பிரச்னையில், ரூ. 10 கோடி கேட்கிறது அமீர் தரப்பு. தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் ரூ. 5 கோடி வரை சமாதானம் பேசி வாங்கி தருவதாக கூறிய நிலையில், ஞானவேல் ராஜா தரப்பு ரூ. 3 கோடி தருவதாக கூறியது. இதை அமீர் தரப்பில் சமுத்திரக்கனி, வெற்றிமாறன், கரு பழனியப்பன் போன்றோர் ஏற்காத நிலையில், அமீர் தொடுத்த வழக்கில் கோர்ட் தீர்ப்புக்காக சிவக்குமார் குடும்பம் காத்திருக்கிறது. சட்டப்படி தீர்வு காணலாம் என்பதே அவர்களது இறுதியான முடிவாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்