- Advertisement -
Homeபொழுதுபோக்குசமீப காலமாக குழப்பத்தில் சூர்யா எடுக்கும் மிக தவறான முடிவுகள், இப்படியே போனால் அவரது சினிமா...

சமீப காலமாக குழப்பத்தில் சூர்யா எடுக்கும் மிக தவறான முடிவுகள், இப்படியே போனால் அவரது சினிமா எதிர்காலம் ? – கவலையில் ரசிகர்கள்

- Advertisement -

ஒரு நடிகர் தொடர்ந்து வெற்றி பெற நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும். நல்ல இயக்குனர்களின் படம் என்றால், அதை மிஸ் செய்யவே கூடாது. அப்படித்தான் அஜீத்குமார் நடிக்க மறுத்த கஜினியும், விஜய் நடிக்க உன்னை நினைத்து படமும் சூர்யாவுக்கு கிடைத்தது. அந்த படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் சூர்யா.

அதேபோல் பிற நல்ல படங்களில் வாய்ப்பு கிடைத்தும் அதை நழுவ விட்டவர் நடிகர் ஸ்ரீகாந்த். அவரே ஒரு நேர்காணலில் கூறுகையில், நான் முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போது, வேறு படங்கள் கைவசம் இருந்ததால் நடிக்க மறுத்துவிட்டேன். பிறகு அப்படி பல படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. காதலுக்கு மரியாதை கூட அதில் ஒரு படம்தான் எனக் கூறியிருந்தார்.

- Advertisement -

இப்படிதான் பல நடிகர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு, இந்த விஷயத்தில் மிக உஷாராக நடந்துக்கொள்கின்றனர். அடுத்தடுத்த படங்களில் முன்னணி நாயகர்களாக வந்து விடுகின்றனர். அந்த வகையில் இப்போதைய நடிகர்களில் அதிக மிகவும் கவனமாக இருப்பவராக நடிகர் சிவகார்த்திகேயனை குறிப்பிட்டுச் சொல்கின்றனர்.

நடிகர் சூர்யாவுக்கு சூரரைப் போற்று படத்துக்கு பிறகு பெரிய அளவில் வெற்றிப் படங்கள் எதுவும் இ்லை. இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகி இருக்கிறது. இதற்கிடையே நடிகர் சூர்யா நடிக்க வேண்டிய படங்கள் என்ன, நடிக்கப் போகும் படங்கள் என்ன என்பதிலும் ரசிகர்களுக்கு மாபெரும் குழப்பம் நிலவுகிறது.

- Advertisement -

அதாவது நந்தா, பிதாமகன் படங்கள் மூலம் நடிகர் சூர்யாவுக்கு சினிமா வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கொண்டு வந்தவர் இயக்குனர் பாலா. அவரது வணங்கான் படத்தை விட்டு சூர்யா வெளியே வந்துவிட்டார். இன்று அனைவராலும் கவனிக்கப்படும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் வெற்றிமாறன். அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டிய வாடிவாசல் படத்தில் இருந்தும் சூர்யா விலகி விட்டார்.

அடுத்து சூரரைப் போற்று படத்தை இயக்கிய சுதா கொங்காரா இயக்கத்தில் புறநானூறு படத்திலும் இப்போதைக்கு நடிக்கவில்லை. அதற்கு நிறைய கால அவகாசம் தேவைப்படுகிறது. அதை சிறந்த படைப்பாக தர வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக அறிக்கை ஒன்றில் கூறிவிட்டார். இப்படி பாலா, வெற்றிமாறன், சுதா கொங்காரா போன்ற முத்திரை பதித்த டைரக்டர்களின் படங்களை புறக்கணிக்கும் சூர்யா, எந்த படத்தில் யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார், நல்ல நல்ல வாய்ப்புகளை எல்லாம் அவரே புறக்கணித்து வருகிறாரே என அவரது ரசிகர்கள் பலத்த கவலையில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்