- Advertisement -
Homeபொழுதுபோக்குரசிகர்கள் சந்தோஷத்தை விட வருமானம்தான் முக்கியமா? வேட்டையனுக்காக ஒதுங்கிய கங்குவா சூர்யாவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்...

ரசிகர்கள் சந்தோஷத்தை விட வருமானம்தான் முக்கியமா? வேட்டையனுக்காக ஒதுங்கிய கங்குவா சூர்யாவை வச்சி செய்யும் நெட்டிசன்கள் – இதெல்லாம் தேவையா பாஸ்?

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாகவே வெற்றிப் படங்கள் எதுவும் வெளிவரவில்லை. குறிப்பாக ஜெய்பீம், சூரரைப் போற்று படங்களை தவிர்த்து சூர்யா நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. குறிப்பாக தானா சேர்ந்த கூட்டம், காப்பான், அஞ்சான், எதற்கும் துணிந்தவன், என்ஜிகே என பல தோல்வி படங்களை சந்தித்தார்.

அதன்பிறகு டைரக்டர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க வேண்டிய வணங்கான் படத்திலும் அவர் பாதியில் விலகி விட்டார். அதே போல், சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்காமலும் விலகி விட்டார். இந்தியில் கர்ணன் என்ற படத்திலும் சூர்யா நடிப்பதாக இருந்து பிறகு அதுவும் நின்று போனது.

இப்படி தொடர்ந்து சூர்யா நடிப்பில் படங்களே வெளிவராத நிலையில், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ள படம் சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா படம். 2 பாகங்களாக உருவாக உள்ள இந்த படத்தின் முதல் பாகம் தயாரான நிலையில், வருகிற அக்டோபர் 10ம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு தயாராக இருந்தது.

ஆனால் அக்டோபர் 10ம் தேதி ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் ரிலீஸாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ரஜினி படத்துடன் மோத தயங்கிய கங்குவா படம், இப்போதைக்கு ரிலீஸ் இல்லை என்பது உறுதியாகி விட்டது. ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்துக்காக கங்குவா படம் ரிலீஸை தள்ளி வைப்பதாக, நேற்று கோவையில் நடந்த மெய்யழகன் இசை வெளியீட்டு விழா நடிகர் சூர்யா தெளிவாக அறிவித்து விட்டார்.

இதில் ரஜினிகாந்த் மூத்தவர். 50 ஆண்டுகளாக நடித்து வருகிறார். சினிமாவின் அடையாளமாக இருப்பவர் என்பதால் அவரது படத்துக்கு வழிவிட்டு ஒதுங்கி கொள்வதுதான் சரி. அதனால் அவருக்கு மரியாதை தரும் விதமாக கங்குவா படம் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுகிறது என்று சூர்யா திட்டவட்டமாக கூறிவிட்டார்.

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்துடன் சூர்யா நடித்துள்ள கங்குவா மோதினால், வருமானம் பெரிய அளவில் பாதிக்கப்படும். படத்தின் வசூலில் பல கோடி ரூபாய்களை இழக்க நேரிடும் என்பதால், ரெடியான படத்தை ரசிகர்களை பார்க்க விடாமல், மீண்டும் தாமதிக்கிறார் சூர்யா. ரசிகனை விட உங்களுக்கு கலெக்‌ஷன்தான் முக்கியமா ப்ரோ என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சற்று முன்