- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு அந்த மாதிரி படங்கள்தான் ரொம்ப பிடிக்கும், ஆனால் என்னுடைய இந்த படம் அதை மாற்றி...

எனக்கு அந்த மாதிரி படங்கள்தான் ரொம்ப பிடிக்கும், ஆனால் என்னுடைய இந்த படம் அதை மாற்றி விட்டது – இயக்குனர் விக்ரமன் வேதனை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். இவரது படங்களை குடும்பத்தோடு பார்க்கலாம். நண்பர்களோடு பார்க்கலாம். காதலர்களாக ஜோடியாக சென்றும் பார்க்கலாம். அப்படி எல்லாவிதங்களிலும் ரசிகர்களை திருப்திபடுத்தும் நல்ல ஜனரஞ்கசமான படங்களை தந்தவர் விக்ரமன்.

புதுவசந்தம் என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமான விக்ரமன் இயக்கிய படங்கள், அந்த படத்தில் நடித்த ஹீரோக்களுக்கு பெரிய திருப்புமுனையை தந்திருக்கின்றன. உதாரணமாக பூவே உனக்காக படம் விஜய்க்கும், உன்னை நினைத்து படம் சூர்யாவுக்கும் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.

- Advertisement -

அதே போல் வானத்தை போல, பிரியமான தோழி, உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் சூரிய வம்சம் என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த விக்ரமன், காமெடி படங்களையும் காமெடி நடிகர்களையும் மிகவும் விரும்புபவர். காமெடி காட்சிகளை படங்களில் கொண்டு வருவதில் அதிக ஆர்வம் கொண்டவராக உள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் இயக்குனர் விக்ரமன் கூறியதாவது, கதையை யோசிக்கும்போதே எனக்கு காமெடியும் வந்துவிடும். ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் காமெடி காட்சிகளில்தான் சின்ன சின்ன மாற்றம் செய்வேன். நான் சொல்வதை மீறி காமெடி சீனில் ஓவராக பேசி நடித்தால், அதற்கு சிரிப்பு வராது என்றால் அதை டப்பிங்கிலேயே கட் செய்துவிடுவேன். கண்டிப்பாக படத்தில் இந்த சீன் வராது என்றும் அவர்களிடம் முன்பே கூறிவிடுவேன்.

- Advertisement -

நான் உதவி இயக்குனராக இருந்த போது, எல்லோரும் என்னை இவர் காமெடி படம்தான் பண்ணுவார் என்று நினைத்தார்கள். அந்த அளவுக்கு எனக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாக இருந்தது. ஆனால் சொந்த வாழ்க்கை தந்த சோதனைகளால், கவலைகளால் இப்போது அந்த உணர்வே என்னிடம் இல்லாமல் போய்விட்டது.

ஆனால் தெரிந்தோ தெரியாமலோ என்னுடைய முதல்படம் புது வசந்தம் ஒரு எமோஷனல் படமாக அமைந்துவிட்டது. அந்த படத்தால் என்னுடைய சினிமா பாதை மாறிவிட்டது. அந்த ஜானரிலேயே அடுத்தடுத்த படங்களை எடுக்க வேண்டியதாகி விட்டது. அந்த படம் பெரிய ஹிட் ஆனதால், அதுபோன்ற படங்களையே பண்ண வேண்டிய கட்டாயத்துக்கு கடைசி வரை தள்ளப்பட்டேன் என்று விக்ரமன் கூறியிருக்கிறார். அடுத்து உன்னை நினைத்து படத்தை 2ம் பாகமாக, சந்தானத்தை ஹீரோவாக வைத்து விக்ரமன் இயக்க திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்