நடிகர் சூர்யா இப்போது மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் இயக்குனர் கே பாக்யராஜின் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தாத இயலாத நிலையில் நேற்று, கே பாக்யராஜின் நுங்கம்பாக்கம் வீட்டுக்கு நேரில் வந்து அவரது புகைப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.
மேலும் மறைந்த இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனு மகள் சரண்யா மற்றும் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா ஆகியோரிடம் துக்கம் விசாரித்துவிட்டு சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து தனது வீட்டுக்கு சென்ற நடிகர் சூர்யா, அகில இந்திய சூர்யா ரசிகர் மன்ற செயலாளரை போனில் அழைத்து கடுமையாக கோபமாக பேசி இருக்கிறார்.
சில தினங்களுக்கு முன் அகில இந்திய சூர்யா ரசிகர் மன்றம் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகி, நடிகர் சூர்யா விரைவில் அரசியலுக்கு வர வேண்டும். அவரை வேறு இடத்தில் வைத்து பார்க்க நாங்கள் ஆசைப்படுகிறோம்.
சூர்யா விரைவில் அரசியலுக்கு வந்தால் தான் இங்கு உள்ளவர்கள் பலரும் எம்எல்ஏ எம்பி களாக மாற முடியும். எங்களது கனவை அவர் நிறைவேற்ற வேண்டும். அந்த கனவை நிறைவேற்ற விரைவில் அவர் தயாராகி விடுவார் என்கிற ரீதியில் அந்த ரசிகர் மன்ற நிர்வாகி கூட்டத்தில் பரபரப்பாக பேசியிருக்கிறார்.
இதற்கு பலத்த கைதட்டலும் விசில் சத்தமும் கூட்டத்தில் பறந்திருக்கிறது. இது குறித்து இணையத்தில் வீடியோக்கள் வைரலான நிலையில் அதைப் பார்த்து பயங்கர கோபமான நடிகர் சூர்யா, சம்பந்தப்பட்ட ரசிகர் மன்ற நிர்வாகியை போனில் அழைத்து, எதற்காக இப்படி பேசியிருக்கிறீர்கள், இப்படி உங்களை நான் பேச சொன்னேனா? இந்த மாதிரி எல்லாம் எண்ணம் இருந்தால் ஓடிப் போய் விடுங்கள்.
எனக்கு இப்போதைக்கு சினிமாவில் நடிப்பது மட்டும்தான் முக்கியம். அரசியலுக்கு வருவதாக நான் உங்களிடம் சொன்னேனா? என்று அவரை கோபமாக திட்டி இருக்கிறார். அதனால் இப்போதைக்கு நடிகர் சூர்யா அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. எதிர்காலத்தில் ஒருவேளை அவர் வந்தாலும் வரலாம் அல்லது அவர் கவனம் முழுவதும் சினிமாவிலேயே இருக்கலாம் என்ற வேகமாக தகவல் பரவி விடுகிறது.





