நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். ஆரம்பத்தில் காக்க காக்க கஜினி ஏழாம் அறிவு சிங்கம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை தந்த நடிகர் சூர்யாவுக்கு கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து தோல்வி படங்களாகவே இருக்கிறது. கடைசியாக வெளியான கங்குவா படமும் கை கொடுக்கவில்லை.
இந்த சூழலில் அடுத்து சூர்யாவின் 44வது படம் ரெட்ரோ படம் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற மே 1ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படம் காதல் களத்தில் உருவாகி இருப்பதால் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
அடுத்து நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் பேட்டைக்காரன் படம் உருவாகி வருகிறது. இது சூர்யாவின் 45வது படமாகும். இந்த படத்தில் திரிஷா 3வது முறையாக சூர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். லப்பர் பந்து நடிகை சுவாசிகா நெடுஞ்சாலை பட நாயகி ஷிவதா மற்றும் நட்டி யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த 2 படங்களும் சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன்பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளார். இதில் இயக்குனர் அமீர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஆக இந்த ஆண்டு சூர்யாவுக்கு நிச்சயமாக மிகப்பெரிய வெற்றிப் படங்கள் கொண்ட ஆண்டாக அமைய அதிக வாய்ப்புள்ளது.
நடிகர் சூர்யா, தன்னுடன் பல படங்களில் நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். காக்க காக்க படத்தில் நடிக்கும்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு பல ஆண்டுகளுக்கு பின் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். இதில் காக்க காக்க படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நடிகர் சூர்யா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
இதுபற்றி சூர்யா கூறுகையில், காக்க காக்க பட ஷூட்டிங்கில் ஒரு சுவர் இருக்கும். அதை உடைத்துக்கொண்டு ஒரு ஸ்லாப் மீது விழுந்து குட்டிக்கரணம் போட்டு அப்புறம் தண்ணீருக்குள் விழணும். தண்ணீ ரொம்ப ஜில்லுன்னு இருக்கும். ஜோ வந்து கண்ணை காட்டுது, பண்ணாத நீ பண்ணக்கூடாதுன்னு அவ்வளவு பெரிய கண்ணை முழிச்சு காமிக்குது. நான்தான் பண்ணுவேன்னு சொல்லி பண்ணிட்டேன் என்று சிரித்தபடி நடிகர் சூர்யா ஒரு நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.





