- Advertisement -
Homeபொழுதுபோக்குரசிகர்களை ஏமாற்றிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அந்த கேரக்டரில் நடிக்க தயாரான நடிகர் சூர்யா -...

ரசிகர்களை ஏமாற்றிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அந்த கேரக்டரில் நடிக்க தயாரான நடிகர் சூர்யா – படத்தை தயாரிப்பது இந்த நிறுவனமா?

- Advertisement -

நடிகர் சூர்யா இப்போது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் வருகிற மே 1ம் தேதி ரிலீஸாகிறது. அதன்பிறகு நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி டைரக்‌ஷனில் தனது 45வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

கோவையில் முதல்கட்ட படப்பிடிப்பு ஒரு மாதத்துக்கு மேல் நடந்து முடிந்த நிலையில் இப்போது சென்னையில் பெரிய கோர்ட் ஷெட் அமைத்து அங்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது. சமீபத்தில் பிரமாண்டமான ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டுள்ளது. பிறகு சூர்யா சண்டையிடும் காட்சிகளும் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

இந்த படங்களுக்கு பிறகு தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்திலும், மலையாள நடிகர் மற்றும் இயக்குனர் பசில் ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க நடிகர் சூர்யா ஒப்பந்தம் செய்திருக்கிறார். இந்த மலையாள படத்தை நடிகர் மம்முட்டி அவரது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார் என்பது கூடுதல் தகவலாக உள்ளது.

இதற்கிடையே நடிகர் சூர்யா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரும்புக்கை மாயாவி என்ற படத்தில் நடிக்க உள்ளதாக பல ஆண்டுகளுக்கு முன்பே தகவல் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் சூர்யா கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

- Advertisement -

அப்போதே இரும்புக்கை மாயாவி என்ற படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாகவும், அந்த படத்தை மிக விரைவில் டைரக்ட் செய்ய உள்ளதாகவும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். அதனால் கூலி கைதி படங்களின் படப்பிடிப்பை முடித்த பிறகு, சூர்யா லோகேஷ் இணையும் படம் இரும்புக்கை மாயாவி படமாக தான் இருக்கும் எ்னறு சூர்யா ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்தனர்.

ஆனால் இப்போது வந்த லேட்டஸ்ட் தகவலின்படி நடிகர் சூர்யா நடிக்கும் படம் ரோலக்ஸ் என்று முடிவாகி உள்ளது. அந்த படத்தை தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூர்யாவை வைத்து டைரக்‌ஷன் செய்ய இருக்கிறார். விஜய் நடிப்பில் ஜனநாயகன் என்ற படத்தை தயாரித்து வரும் பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம்தான் இந்த ரோலக்ஸ் படத்தை தயாரிக்க உள்ளது. கைதி 2 படத்தை முடித்த பின், 2026ம் ஆண்டில் சூர்யா நடிக்கும் ரோலக்ஸ் படம் ஷூட்டிங் துவங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்