இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிசு செல்லப்பா எழுதிய படைப்பை மையமாக வைத்து வாடிவாசல் என்ற படம் உருவாக்க திட்டமிடப்பட்டது. கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்கின்றார். விடுதலை 2 படத்தில் வெற்றிமாறன் பிஸியாக இருந்ததால், விரைவில் இந்த படம் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முக்கிய கேரக்டரில் வாடிவாசல் படத்தில் அமீர் நடிப்பதால் சூர்யா பின்வாங்கினார்.
பருத்திவீரன் பஞ்சாயத்து காரணமாக வெறுப்பில் இருந்த நிலையில், அமீர் அந்த கேரக்டரில் நடிப்பதை சூர்யா விரும்பவில்லை. அமீர் கேரக்டரில் மோகன்லால் நடிக்கட்டும், நான் கேட்டால் சம்மதிப்பார் என வெற்றிமாறனிடம் நேரடியாக கேட்ட சூர்யாவிடம்,, படத்தின் இயக்குநர் நான்தான். அந்த கேரக்டரில் அமீர்தான் நடிக்க வேண்டும். உங்களுக்கு விருப்பமில்லை எனில் விலகிக்கொள்ளுங்கள் என நேரடியாக சொல்லிவிட்டார். மேலும் அஜீத்தை வைத்து விரைவில் வேறு படம் ஒன்றை எடுக்கவும் வெற்றிமாறன் ஆயத்தமாகி வருகிறார்.
இந்நிலையில் மனைவி ஜோதிகா, பிள்ளைகளுடன் மும்பையில் செட்டிலாகி உள்ள நடிகர் சூர்யா, இந்தி படம் ஒன்றில் விரைவில் நடிக்கிறார். இந்தி படவுலகில் பிரபல இயக்குநராக உள்ள ஓம்பிரகாஷ் இயக்கும் மகாபாரத கதையில், கர்ணன் வேடத்தில் சூர்யா நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். பாலிவுட்டில் பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக எக்ஸலண்ட் டைமண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது.
பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படம் முதலில் இந்தியில் எடுக்கப்படுகிறது. பிறகு பிறமொழியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என வெர்சன் மாற்றப்படுகிறது. இதையடுத்து இந்தி படவுலகில் கால் பதிக்கும் நடிகராக சூர்யாவுக்கு அந்தஸ்து உயர்கிறது. சமீபத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, ராஷ்மிகா மந்தனா போன்றவர்களும் இந்தி படவுலகில் நுழைந்துள்ளனர்.
இதுவரை சூர்யா 500 கோடி ரூபாய் என்ற மெகா பட்ஜெட் படத்தில் நடித்தது இல்லை. இதுவே முதன்முறை. அதுமட்டுமின்றி வாடிவாசல் படத்துக்காக ஒதுக்கிய கால்ஷீட் தேதிகளில்தான் இந்த இந்தி படத்தில் நடிக்க தேதிகளை சூர்யா ஒதுக்கித் தந்துள்ளார். இதன்மூலம் வாடிவாசல் படத்தில் இப்போதைக்கு சூர்யா நடிக்கவில்லை என்பது உறுதியாகிறது.
இந்த இந்தி படத்தில் நடிக்க காரணமே, சூர்யாவின் மனைவி ஜோதிகா தான். அவருக்கு இந்தி படவுலகில் நிறைய தொடர்புகள் உள்ளது. நண்பர்களும் நிறைய உள்ளனர். இந்த படத்தை தயாரிக்கும் நிறுவன உரிமையாளர் ஜோதிகாவின் பள்ளி கால நண்பர் என்றும் தெரிய வந்துள்ளது. இந்தி படத்தை அடுத்து ஆங்கில படம் ஒன்றில் சூர்யா நடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருவதால் இந்தி, ஆங்கிலம் என மாறிய சூர்யா, வாடிவாசல் பக்கம் இனி வர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.





