- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூர்யாவுக்கு 6 வயது மூத்த நடிகை மேல கிரஷ்ஷா? பொதுவெளியில் போட்டுடைத்த நடிகர் கார்த்தி...

நடிகர் சூர்யாவுக்கு 6 வயது மூத்த நடிகை மேல கிரஷ்ஷா? பொதுவெளியில் போட்டுடைத்த நடிகர் கார்த்தி – இப்படி போட்டு உட்டுட்டீங்களோ ப்ரோ?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. வருகிற 14ம் தேதி அவர் நடித்த கங்குவா படம் ரிலீஸாகிறது. எதற்கும் துணிந்தவன் படத்துக்கு பிறகு 2.5 ஆண்டுகளுக்கு பின் கங்குவா படம் திரைக்கு வருவதால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர். சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கி உள்ளார்.

நிதி பிரச்னையில், இன்னும் நிறைய கோடிகள் தராமல் பாக்கி இருப்பதாக கங்குவா படத்தை வெளியிடக்கூடாது என ரிலையன்ஸ் நிறுவனம் தொடுத்த வழக்கிலும், கங்குவா படத்தை வெளியிட தடையில்லை என்று நேற்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்து விட்டது. அதனால் குறித்த தேதியில் கங்குவா படம் ரிலீஸாகிறது என்பது உறுதியாகி விட்டது.

- Advertisement -

கங்குவா படத்தின் பிரமோசனுக்காக நடிகர் சூர்யா தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். டெல்லி, மும்பை, ஐதராபாத் சென்னை என பல நகரங்களுக்கு நேரில் சென்று கங்குவா படம் குறித்து ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். இதுவரை நீங்கள் பார்க்காத ஒரு படமாக, ஒரு சிறந்த அனுபவமாக கங்குவா இருக்கும் என்றும் கூறிக்கொண்டு வருகிறார்.

இந்த சூழலில் சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் தெலுங்கு நடிகர் பாலய்யா என்கிற பாலகிருஷ்ணாவும் கலந்துக்கொண்டார். அப்போது சூர்யாவும், பாலகிருஷ்ணாவும் மேடையில் ஒரே சோபாவில் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

- Advertisement -

அப்போது நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்திக்கு பாலகிருஷ்ணா போனில் அழைத்து தெலுங்கில் பேசுகிறார். அப்போது உங்கள் அண்ணன் சூர்யாவுக்கு திருமணத்துக்கு முன்பு காதல் இருந்ததா, என்று கார்த்தியிடம் கேள்வி கேட்கிறார். போனில் எதிர்முனையில் தெலுங்கில் பேசும் கார்த்தி, ஆமாம் அவருக்கு சிக்குபுக்கு ரயில் பாடலில் நடித்த நடிகை மீது கிரஷ் இருந்தது என்கிறார்.

ஆச்சரியப்பட்ட நடிகர் பாலகிருஷ்ணா, சிக்குபுக்கு ரயில் பாடலில் நடித்த நடிகை அப்படி என்றால், நடிகை கெளதமியா என்று கேட்கிறார். ஆமாம் என்று கார்த்தி சொல்லி சிரிக்கிறார். அப்போது வெட்கத்தில் சிரிக்கும் நடிகர் சூர்யா, நீ கார்த்தி இல்லே, சரியான கத்தி என்கிறார். சூர்யாவை விட கௌதமி 6 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சூர்யா நடிகை கௌதமியை காதலித்த விஷயம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்