ஒரு காலத்தில் சினிமாவில் நடிப்பதை கேவலமாக நினைத்த மக்களும் இருந்தார்கள். தங்களது உறவினர்கள் நண்பர்கள் தரப்பில் யாராவது சினிமாவில் நடிக்க விரும்புகிறார்கள் என்றால் அவர்களை கண்டபடி திட்டி விமர்சனம் செய்வார்கள். அது கூத்தாடி பொழப்பு என்றும் ஏளனமாக பேசிய காலகட்டம் இருந்தது.
ஆனால் இப்போதெல்லாம் தனது மகனை அல்லது மகளை பெரிய நடிகையாக மாற்றி விட வேண்டும் என்று பெற்றோர்களே அதிக விருப்பம் காட்டுகின்றனர். மகன் அல்லது மகளுக்காக அவர்களே இயக்குனர்களை தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு வாய்ப்பு கேட்கின்றனர். பல நட்சத்திர நடிகர் நடிகைகளின் மகன்கள் மகள்கள் இப்போது சினிமா வாரிசுகளாக நடித்தும் வருகின்றனர்.
அதே நேரத்தில் தங்களது மகள் நடிகையாக பிரபலமாக இருந்த போதிலும் தங்களது கவனத்தில் கொண்டு வராமல் படுக்கையறை காட்சியில் நடித்த ஒரே காரணத்துக்காக நீ இனி என் மகளே இல்லை என்று குடும்பத்தை விட்டே ஒதுக்கி வைத்த பெற்றோரும் இருக்கின்றனர் என்றால் அது நம்ப முடிகிறதா? ஆனால் இது நடந்த உண்மைதான்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து கடந்தாண்டில் வெளியான படம் கூலி. இந்த படத்தில் வில்லியாக நடித்த கன்னட நடிகை ரக்சிதா ராம் நடிப்பு சிறப்பாக இருந்தது. வில்லி நடிப்பில் ரக்சிதா ராம் வேற லெவலில் அசத்தியிருந்தார்.
நடிகை ரக்சிதா ராம் கன்னட நடிகை. கடந்த 2010ம் ஆண்டு முதல் படங்களில் நடித்து வருகிறார். ஏராளமான கன்னட படங்களில் அவர் நடித்துள்ளார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரக்சிதா ராம் கூறியதாவது, ஒரு படத்தில் நான் நடித்த போது படுக்கையறை காட்சியில் நடிக்கும் சூழல் வந்தது. அந்த காட்சியில் நடிப்பது குறித்து என் வீட்டில் பர்மிசன் கேட்பதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் நான் இருந்தேன்.
ஆனால் கதைக்கு அந்த காட்சி தேவை என்றதால் நான் வீட்டில் பெற்றோரிடம் கேட்காமல் அந்த காட்சியில் நடித்துவிட்டேன். ஆனால் அந்த படம் ரிலீஸாகி படத்தை பார்த்த பிறகு என் பெற்றோர் குடும்பத்தை விட்டு என்னை மொத்தமாக ஒதுக்கி வைத்து விட்டார்கள். அதற்கு பிறகு என்னை அவங்க அவர்களின் பொண்ணாகவே பார்ப்பதில்லை என்று ரக்சிதா ராம் வேதனையாக கூறியிருக்கிறார்.





