- Advertisement -
Homeபொழுதுபோக்குமிக விரைவில் ஆபாவாணன் படத்தில் நடிக்கிறார் விஜயகாந்த் - இது உருட்டல்ல உண்மை … ...

மிக விரைவில் ஆபாவாணன் படத்தில் நடிக்கிறார் விஜயகாந்த் – இது உருட்டல்ல உண்மை … இரங்கல் நிகழ்ச்சியில் ஆபாவாணன் தெரிவித்த தகவல்

- Advertisement -

நடிகர் விஜயகாந்த் சினிமா பயணத்தில் மிகப்பெரிய அடையாளத்தை அவருக்கு ஏற்படுத்தி தந்த படம் ஊமைவிழிகள். டிஎப்டி படித்த திரைப்பட கல்லூரி மாணவர்கள் என்றாலே சினிமா வாய்ப்பு மறுக்கப்பட்ட காலத்தில், அவர்களை வரவேற்று அரவணைத்தவர் நடிகர் விஜயகாந்த்.

முதன்முறையாக திரைப்படக் கல்லூரி மாணவர் ஆபாவாணன் இயக்கிய படம்தான் ஊமைவிழிகள். டிஎஸ்பி தீனதயாளன் என்ற கேரக்டரில் இந்த படத்தில் விஜயகாந்த் நடிப்பு, மிக கம்பீரமாக இருக்கும். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு திரைப்பட கல்லூரி மாணவர்கள் என்றாலே, தமிழ் சினிமாவில் தனி மரியாதை கிடைத்தது. இதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் தான்.

- Advertisement -

அதன்பிறகு புலன் விசாரணை படத்தை இயக்கிய டிஎப்டி படித்த ஆர்கே செல்வமணி தான், கேப்டன் பிரபாகரன் படத்தை இயக்கினார். விஜயகாந்த் சினிமா பயணத்தில் மற்றொரு முக்கிய படமாக அமைந்த சின்னக்கவுண்டர் படத்தை இயக்கிய ஆர்வி உதயகுமார் ஒரு டிஎப்டி மாணவர்தான். இப்படி தனது சினிமா பயணத்தில் 47 பேருக்கு வாய்ப்பு கொடுத்தவர் விஜயகாந்த். ராவுத்தர் பிலிம்ஸ், கேப்டன் சினி கிரியேசன்ஸ் மூலம், படங்களை தயாரித்தும் புதுமுக இயக்குநர்களுக்கு விஜயகாந்த் உதவினார்.

நேற்று முன்தினம் 28ம் தேதி காலை விஜயகாந்த் மறைந்தார். நேற்று மாலை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை பிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடந்த விஜயகாந்த் மறைவுக்கான இரங்கல் நிகழ்ச்சியில் ஊமைவிழிகள் படத்தை இயக்கிய இயக்குநர் ஆபாவாணன் கலந்துக்கொண்டார்.

- Advertisement -

அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய இயக்குநர் ஆபாவாணன், ஊமைவிழிகள் என்ற படத்தின் 2ம் பாகத்தை விரைவில் இயக்க திட்டமிட்டுள்ளேன். அந்த படத்தில் டிஎஸ்பி தீனதயாளன் என்ற கேரக்டரில் விஜயகாந்த் நடிக்க வேண்டும். ஆனால் அவர் மறைந்துவிட்டார். எனினும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அவர் நடிக்கும் காட்சிகளை தத்ரூபமாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்ற தகவலை பகிர்ந்தார்.

சமீபமாக ஏஐ தொழில்நுட்ப மிகப்பெரிய அதிசயங்களை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் எம்ஜிஆர் பாடுவது போன்ற ஒரு வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இப்போது ஊமைவிழிகள் 2 படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் திரையில் வரும் 2024ல் தோன்றும் வாய்ப்பை ஆபாவாணன் உருவாக்க திட்டமிட்டுள்ளார். இது மறைந்த அந்த மனிதநேய மிக்க தலைவரை, மீண்டும் திரையில் காணும் ஒரு மகிழ்ச்சியை, எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்