- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தில் நடித்த போதே விஜய் அரசியலுக்கு வருவதாக என்னிடம் சொன்னார் - 23 ஆண்டுகளுக்கு...

அந்த படத்தில் நடித்த போதே விஜய் அரசியலுக்கு வருவதாக என்னிடம் சொன்னார் – 23 ஆண்டுகளுக்கு முந்தைய ரகசியத்தை போட்டுடைத்த பிரபல நடிகர்!

- Advertisement -

தமிழக அரசியலில் நடக்கும் மாற்றங்கள் அவ்வப்போது மக்களுக்கு அதிசயமாக இருந்து ஆச்சரியத்தை தருகிறது. அரசியலுக்கு வருவார் என பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை. யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் நடிகர் கமல்ஹாசனும் அவரை தொடர்ந்து நடிகர் விஜயும் தமிழக அரசியல் களத்தில் குதித்து விட்டனர்.

நடிகர்கள் கமல்ஹாசன் விஜய் இருவருமே அரசியல் களத்துக்கு மிகவும் புதியவர்கள்தான். கடைசியில் நடிகர் கமல்ஹாசன் எப்படியோ ராஜ்யசபா எம்பி ஆகி விட்டார். அதே போல் விஜயும் தமிழகத்தின் முதல்வர் கனவோடு அரசியல் களத்தில் தீவிரமாக இருந்து வருகிறார். இந்த சூழலில் நடிகர் விஜய்க்கு ஆரம்பத்தில் இருந்தே அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

- Advertisement -

அவருடன் பல படங்களில் நடித்த காமெடி நடிகர் தாமு இதை பகிரங்கமாக கூறியிருக்கிறார். 23 ஆண்டுகளுக்கு முன்பே விஜயும் நானும் ஒரு படத்தில் இணைந்து நடித்த போது தனது அரசியல் விருப்பம் குறித்து அவர் கூறியிருக்கிறார் என்று நடிகர் தாமு சமீபத்தில் கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி ரோலில் நடித்தவர் நடிகர் தாமு. குறிப்பாக பத்ரி கில்லி காதலுக்கு மரியாதை லவ் டுடே நிலாவே வா என பல படங்களில் நடிகர் விஜயுடன் தாமு நடித்திருக்கிறார். விஜயின் நெருக்கமான சினிமா நண்பர்களில் நடிகர் தாமுவும் ஒருவர். கடந்த 2001ம் ஆண்டு வெளியான பத்ரி திரைப்படத்திலும் நடிகர் தாமு விஜயுடன் நடித்திருந்தார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் தாமு கூறியதாவது, பத்ரி படத்தில் நடித்த போது நான் ஒரு அரசியல் கட்சியில் இணைந்திருந்தேன். அப்போது விஜய் என்னிடம், என்ன அரசியலுக்கு போயிட்டீங்க? என்று கேட்டார். அரசியல் பற்றி தெரிந்து கொள்ள தான் கட்சியில் சேர்ந்தேன் என்று கூறினேன். அதற்கு விஜய், நானும் அரசியலுக்கு வருவேன் என்று கூறினார். அப்போது கூறியதை இப்போது விஜய் செய்து காட்டிவிட்டார்.

அரசியலைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டுதான் இந்த துறையில் விஜய் காலடி வைத்திருக்கிறார். அரசியல் கட்சி துவங்குவதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். அரசியல் களத்துக்கு வருவற்கு முன்பே பெரிய அளவில் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அதை எல்லாம் செய்துவிட்டு தான் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்றும் நடிகர் தாமு அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். பத்ரி படத்தில் நடித்த போதே விஜய்க்கு அரசியல் ஆர்வம் இருந்ததா என்று ரசிகர்கள் ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்