- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமா பயணத்தில் 2வது ரவுண்டில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நடிகர் வடிவேலு - சுந்தர் சி...

சினிமா பயணத்தில் 2வது ரவுண்டில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நடிகர் வடிவேலு – சுந்தர் சி இயக்கிய கேங்கர்ஸ் படம்தான் கம்பேக் தரப்போகிறதா?

- Advertisement -

நடிகர் ராஜ்கிரண் மீனா நடித்த என் ராசாவின் மனசிலே படம்தான் வடிவேலு நடிகராக அறிமுகமான முதல் படம். இந்த படத்தில் ஒரு காட்சியில் கவுண்டமணியிடம் அண்ணே, நல்லா இருக்கீங்களாண்ணே என்று கேட்டு செமத்தியாக உதை வாங்குவார். உண்மையிலேயே அந்த காட்சியில் நடித்த போது, நடிகர் கவுண்டமணி வடிவேலுவை பலமுறை மிதித்து விட்டாராம்.

அதன் பிறகு விஜயகாந்துடன் சின்னக்கவுண்டர் கமலுடன் சிங்காரவேலன் மற்றும் தேவர்மகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஷங்கர் இயக்கத்தில் நடிகர் வடிவேலு காதலன் முதல்வன் படங்களிலும் நடித்ததால் பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் அடையாளம் பெற்றார். அவருக்கு தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு அமைந்தது.

- Advertisement -

அதன்பிறகு குடும்பப்பட இயக்குனர் வி சேகர் இயக்கிய வரவு எட்டணா செலவு பத்தணா பொங்கலோ பொங்கல் காலம் மாறிப்போச்சு கூடிவாழ்ந்தால் கோடி நன்மை போன்ற பல படங்களில் நடித்து பெரிய அளவில் வரவேற்பு பெற்ற அவர் பிறகு காமெடி நடிப்பில் கொடி கட்டிப் பறந்தார். வடிவேலு நடித்திருக்கிறாரா என ஒரு படம் குறித்து கேட்கும் அளவுக்கு அவரது இமேஜ் உச்சத்தை தொட்டது.

இம்சை அரசன் 23ம் புலிகேசி இந்திரலோகத்தில் நா அழகப்பன் தெனாலிராமன் போன்ற படங்களில் நாயகனாகவும் நடித்து நடிகர் வடிவேலு வெற்றி பெற்றார். அவரும் நாயகிகளுடன் சேர்ந்து டூயட் பாடியதை ரசிகர்கள் ரசிக்கவே செய்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் சில விவகாரங்களில் சிக்கிய வடிவேலு 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடிப்பதில் இடைவெளி விட்டு சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

- Advertisement -

அந்த காலகட்டத்தில்தான் சந்தானம் சூரி சதீஷ் யோகிபாபு ரெடின் கிங்ஸ்லி போன்ற காமெடி நடிகர்கள் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றனர். இப்போது சந்தானம் சூரி சதீஷ் போன்றவர்களும் நாயகன்களாக மாறிவிட்டதால் வடிவேலு தனது 2வது ரவுண்டில் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

ஆனால் 2வது சுற்றில் அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை என்பதே கசப்பான உண்மை. அவரது காமெடி பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆகவில்லை. இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவர உள்ள கேங்கர்ஸ் படத்தில் வடிவேலு 5 கேரக்டர்களில் நடித்திருப்பதாகவும் அதிலும் ஆண்ட்டி கேரக்டரில் பெண் வேடத்தில் அவரது நடிப்பு வேற லெவலில் உள்ளதாகவும், கேங்கர்ஸ் படம் வடிவேலுக்கு கம்பேக் தரும் என்றும் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

சற்று முன்