- Advertisement -
Homeபொழுதுபோக்குகணபதி ஐயர் பேக்கரியை குறிவைக்கும் நடிகர் வடிவேலு - மீண்டும் அதே வீரபாகு கேரக்டரில் திரையில்...

கணபதி ஐயர் பேக்கரியை குறிவைக்கும் நடிகர் வடிவேலு – மீண்டும் அதே வீரபாகு கேரக்டரில் திரையில் வரப்போகிறாரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் தனக்கென ஒரு தனி பாணியை கொண்டு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றவர் நடிகர் வடிவேலு. வைகைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர் வடிவேலு ஏராளமான படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். குறிப்பாக 1990 முதல் 2010 வரை 20 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காமெடி கொடி கட்டி பறந்தது என்றால் அது மிகையல்ல.

ஹீரோக்களை விடவும் வடிவேலுவின் கால்ஷீட் கிடைக்குமா என்று நடிகர் ரஜினிகாந்த் போன்ற நட்சத்திர ஹீரோக்களே கேட்கும் அளவிற்கு மிகவும் பிஸியான நடிகராக பல படங்களில் நடித்தவர் வடிவேலு. குறிப்பாக தினமும் தினசரி சம்பளம் 12 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை வாங்கிய காமெடி நடிகர் வடிவேலு என்றால் அது நடந்த உண்மைதான்.

- Advertisement -

காமெடி நடிகராக மட்டுமின்றி அவர் ஹீரோவாக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி தெனாலிராமன் போன்ற படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக 10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகர் வடிவேலு இப்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். ஆனால் முன்பு போல் அவரது படங்களில் காமெடி காட்சிகளுக்கு பெரிய அளவில் வரவேற்பும் ஆதரவும் ரசிகர்களிடம் கிடைக்கவில்லை.

மாமன்னன் மாரீசன் போன்ற சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடிகர் வடிவேலு நடித்திருக்கிறார். அவர் நடிப்பில் மீண்டும் பழைய காமெடியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டினாலும் அது போன்ற காமெடி காட்சிகள் வடிவேல் நடிப்பில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சுந்தர் சி இயக்கிய கேங்ஸ்டர் படத்தில் கூட வடிவேலுவின் காமெடி பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை.

- Advertisement -

நடிகர் வடிவேலு நடித்த படங்களில் அர்ஜூன் ஹீரோவாக நடித்த கிரி படம் காமெடி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அதில் வீரபாகு என்ற கேரக்டரில் கணபதி ஐயர் பேக்கரி ஓனராக வடிவேலு நடித்திருப்பார். அந்த கெட்டப்பும் அவரது காமெடி நடிப்பும் மிகப் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இப்போதும் கிரி படத்தின் காமெடி காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

அதனால் அந்த கணபதி ஐயர் பேக்கரி கேரக்டரை மையப்படுத்திய வீரபாகு என்ற கேரக்டரில் ஒரு படத்தில் நடிக்க வடிவேலு முடிவு செய்து இருக்கிறார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஒருவர் டைரக்ட் செய்ய இருக்கிறார். இந்த படத்துக்கு டைட்டில் வீரபாகு என்று வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்துக்கு இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. தயாரிப்பாளர் ஒருவர் ஓகே சொல்லிவிட்டால் விரைவில் வீரபாகு படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்