- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி என் மேல பயங்கர கோவமா இருக்காராம்… என் மேல கேஸ் போடப் போறாராம்… -...

ரஜினி என் மேல பயங்கர கோவமா இருக்காராம்… என் மேல கேஸ் போடப் போறாராம்… – நேர்காணல் ஒன்றில் பகீர் தகவலை வெளியிட்ட நடிகர் வடிவேலு

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் வைகைப்புயல் என அழைக்கப்படுபவர் நடிகர் வடிவேலு. என் ராசாவின் மனசிலே என்ற ராஜ்கிரண் படத்தில் தனது சினிமா பயணத்தை துவங்கிய நடிகர் வடிவேலு, தமிழ் சினிமாவில் ஒரு காமெடி அரசனாக வலம் வந்தவர். பல படங்கள் அவரது காமெடி காட்சிகளுக்காகவே திரையரங்குகளில் பல நாட்கள் ஓடி வெற்றி பெற்றது என்றால் மிகையல்ல.

நடிகர் வடிவேலுவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல அடையாளத்தை ஏற்படுத்தித் தந்தது இயக்குனர் வி சேகர் இயக்கிய சில படங்கள்தான். அதே போல் தேவர் மகன் படத்திலும் இசக்கி என்ற கேரக்டரில் அவரை நன்றாக நடிகர் கமல்ஹாசன் அடையாளம் காட்டியிருந்தார். அதே போல் சிங்காரவேலன் படத்திலும் வடிவேலு நடிப்பு சிறப்பாக இருந்தது.

- Advertisement -

காமெடி நடிகராக இருந்து பிறகு கதாநாயகனாக சில படங்களில் நடித்தும் வெற்றி பெற்றார் வடிவேலு. இம்சை அரசன் 23ம் புலிகேசி இந்திரலோகத்தில் நா அழகப்பன் தெனாலிராமன் போன்ற படங்கள் வடிவேலுவுக்கு பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. இடையில் 10 ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த வடிவேலு இப்போது 2வது சுற்றில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இப்போது சுந்தர் சி இயக்கத்தில் கேங்கர்ஸ் என்ற படத்தில் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ஏற்கனவே சுந்தர் சி இயக்கிய படங்களிலும், சுந்தர் சி நடித்த படங்களிலும் அவர்களது கூட்டணி பெரிய அளவில் வரவேற்பை வெற்றியை பெற்றிருக்கிறது. அதனால் இந்த படமும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் 24ம் தேதி ரிலீஸாகிறது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் வடிவேலு கூறியதாவது, ரஜினி என் மேல பயங்கர கோவமாக இருக்காராம். என் மேல கேஸ் போடப் போறாராம் இப்படி எல்லாம் செய்தி வருகிறது. ரஜினி ஏன் என் மேல் கேஸ் போடப் போறார்? கூலி படத்தில் நான் கூப்பிட்டு வடிவேலு நடிக்க மாட்டேன் என்று கூறிட்டார். இனிமேல் எந்த படத்திலும் வடிவேலு நடிக்க முடியாது அப்படீன்னு ரஜினி சொன்னாராம்.

இப்படி ஆளாளுக்கு வாய்ல வந்ததை எல்லாம் கிளப்பி விட்டுட்டு இருக்காங்க. உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே. நம்ம கண்ணை நம்மாலே நம்ப முடியலே அப்படீன்னு கண்ணதாசன் பாடியிருக்கார். அதுதான் இதை எல்லாம் பார்க்கும்போது ஞாபகம் வருது. இப்போ பார்த்தால் பொய் தான் தலைவிரிச்சு ஆடுது. ஒரு படத்தை முடிச்சு ரிலீஸ் பண்றது, ஒரு புள்ளைய பெக்கற மாதிரி இருக்குது, என்று அந்த நேர்காணலில் வடிவேலு பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்