- Advertisement -
நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாக மிரட்டியவர் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால். இவர் மதராஸி என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்திருந்தார். மேலும் சூர்யா நடித்த அஞ்சான் என்ற படத்தில் அவரது நண்பராகவும் நடித்திருந்தார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் வித்யுத் ஜம்வால் கூறியதாவது, இந்த தலைமுறையின் முக்கியமான ஆக்சன் நட்சத்திரங்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் விரைவில் உருவெடுப்பார். அவருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். ஆக்சன் படங்களில் நடிக்கும் நடிகர் என்ற முறையில் ஒருவருடன் இணைந்து நடிக்கும் போது அவருடைய திறமையை என்னால் அறிந்து கொள்ள முடியும் என்று அவர் உறுதியாக கூறியிருக்கிறார்.





