- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் அம்மா கூட நிறைய தடவை சண்டை போட்டிருக்கேன், நடிகர் விஜய் தந்த ஓபன்...

நான் அம்மா கூட நிறைய தடவை சண்டை போட்டிருக்கேன், நடிகர் விஜய் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட் – என்ன தலைவரே இதெல்லாம்?

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக ஜனநாயகன் படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படம் அவரது 69வது படம். ஜனநாயகன் படத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்வதாக அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக அவர் அரசியல் களத்தில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார்.

நடிகர் விஜயின் பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர். இதில் எஸ்ஏசி இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் உள்ளார். அவரது மனைவி ஷோபா பல பாடல்களை பாடியிருக்கிறார். விஜயின் தாய் மாமா எஸ்என் சுரேந்தரும் பிரபல பாடகர். பல படங்களில் டப்பிங் பேசியிருக்கிறார். சில படங்களில் நடித்தும் இருக்கிறார். விஜய் குடும்பமே ஒரு கலைக்குடும்பம்தான்.

- Advertisement -

தனது குடும்பம் குறித்து நடிகர் விஜய் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, எங்க அப்பா எப்படி என்றால் என்னை தனியா கூட்டீட்டு போய் இந்த மாதிரி இந்த மாதிரி எல்லாம் தப்பு பண்ணியிருக்கே. இதை இப்படி பண்ணனும் என்று சொல்வார். அதுவும் தனியா கூட்டீட்டு போய்தான் சொல்வார். ஆனா அம்மா அப்படி இல்லே. எதுனாலும் சும்மா படபடன்னு சொல்லிடுவாங்க.

அது நல்லதா இருந்தாலும் நல்லா பண்ணலே என்றாலும் படபட என்று சொல்லிடுவாங்க. அதனால் அந்த விஷயமும் எனக்கு அம்மாகிட்ட ரொம்ப பிடிக்கும். எனக்கு எங்க அப்பா அம்மாவை நினைச்சாலே எனக்கு காதலுக்கு மரியாதை படத்துல வர்ற சிவக்குமார் சாரும் ஸ்ரீவித்யா அம்மா ரெண்டு பேரும் தான் ஞாபகத்துக்கு வருவாங்க.

- Advertisement -

எங்க அப்பா கேரக்டர் அப்படியே சிவக்குமார் சார். எங்க அம்மா கேரக்டர் அப்படியே ஸ்ரீவித்யா அம்மா இருப்பாங்க. அந்த படத்துல பார்த்தாவே அது தெரியும். எனக்கு அப்பாவா சிவக்குமார் சார் நாசூக்கா வந்து பேசுவார். பிரண்டு மாதிரி பழகுவார். அம்மா வந்து செல்லமா கோபப்படுவாங்க. நானும் எங்க அம்மா கூட செல்லமா சண்டை போட்டுக்கறது.

சின்ன வயசுல டிரஸ் விஷயத்துல ரொம்ப சண்டை வரும். இந்த டிரஸ்சை தான் போடுவேன் என்று அடம்பிடிப்பேன். இல்லே இல்லே நீ அந்த டிரஸ்தான் போடணும் என்று அவங்க சொல்வாங்க. அந்த மாதிரி அம்மா கூட நிறைய சண்டை வரும். டிரஸ்க்காக அம்மாகிட்ட சண்டை போடுவேன் என்று நடிகர் விஜய் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்