- Advertisement -
Homeபொழுதுபோக்குஏப்ரல் 14ம் தேதியை இந்தியாவின் ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு...

ஏப்ரல் 14ம் தேதியை இந்தியாவின் ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் – மத்திய அரசுக்கு தவெக தலைவர் விஜய் கோரிக்கை!

- Advertisement -

அம்பேத்கரின் பிறந்த தினமான நேற்று சென்னையில் எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், அந்நூலை வெளியிட அம்பேத்ரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் முன்னாள் நீதிபதி கே சந்துரு, விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது, அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது எனக்கு கிடைத்த வரமாக நான் கருதுகிறேன். 100 ஆண்டுகளுக்கு முன்பே கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்து சாதனை படைத்தவர் அம்பேத்கர்.

- Advertisement -

அவர் எந்த சூழ்நிலையில் கொலம்பியா போனார் என்பது மிகவும் முக்கியம். மாணவர்களுடன் சரிசமமாக உட்கார அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. படிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவருக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட போது தான் அவருக்கு படிக்க வேண்டும் என்ற லட்சியம் அதிகரித்தது.

அவருக்குள் இருந்த அந்த வைராக்கியம் அவரை சாதிக்க வைத்தது. அந்த வைராக்கியம்தான் அவரை தலைசிறந்த அறிவு ஜீவியாகவும் மாற்றியது. வன்மத்தை மட்டுமே தனக்கு கொடுத்த இந்த சமூகத்துக்கு அவர் செய்த செயல்களை படிக்கும் போது சிலிர்க்கிறது. நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் பெருமை தேடித்தந்தவர் அண்ணல் அம்பேத்கர்.

- Advertisement -

ஆனால் இன்றைக்கு அம்பேத்கர் இருந்திருந்தால் இன்றைய இந்தியாவைப் பார்த்து அவர் என்ன நினைப்பார். ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல். ஆனால் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என நான் சொல்லவில்லை. ஆனால் சுதந்திரமாகவும் நியாயமாகவும் தான் தேர்தல் நடக்கிறது என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

அதற்கு ஒருமித்த கருத்துடன் தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய வலிமையான கோரிக்கை. அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதியை, இந்தியாவின் ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்பது என்னுடைய மற்றொரு கோரிக்கை. இதை நான் மத்திய அரசுக்கு முன்வைக்கிறேன் என்று நடிகர் விஜய் பேசி இருக்கிறார். மேலும் விழாவில் பங்கேற்றவர்களில் பலருக்கு மேடையில் நடிகர் விஜய், எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் நூலை வழங்கினார்.

- Advertisement -

சற்று முன்