- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு கல்யாணமாகி மனைவி குழந்தைங்க இருக்காங்க… ஆனா அவங்களை நான் கட்டாயப்படுத்தலே - ஓபனாக பேசிய...

எனக்கு கல்யாணமாகி மனைவி குழந்தைங்க இருக்காங்க… ஆனா அவங்களை நான் கட்டாயப்படுத்தலே – ஓபனாக பேசிய நடிகர் சசிக்குமார்!

- Advertisement -

பெரும்பாலான நடிகர்களின் மனைவி பிள்ளைகள் மற்றும் அவர்களது குடும்பம் பறறிய பல விஷயங்கள் வெளிப்படையாக ரசிகர்களுக்கு தெரியும். உதாரணமாக நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு அர்ஜூன் முரளி கார்த்திக் சிவக்குமார் சூர்யா சிவகார்த்திகேயன் என பலரது குடும்பங்கள் ரசிகர்களுக்கு தெரிந்திருக்கினறன.

ஆனால் சில நடிகர்கள் குடும்பங்கள் பற்றிய எந்த தகவலும் ரசிகர்களுக்கு தெரியாது. குறிப்பாக நடிகர் கவுண்டமணி தன் மனைவி பிள்ளைகள் குறித்த எந்த தகவலையும் வெளியில் சொன்னது இல்லை. அவர் தனிப்பட்ட முறையில் டிவி சேனல் பத்திரிகைகளுக்கு பேட்டியும் தர மாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதே போல் கடந்த 1980 90களில் மிக பிரபலமான நடிகராக இருந்தவர் மைக் மோகன். அவரது மனைவி பிள்ளைகள் குறித்த எந்த தகவலுமே ரசிகர்களுக்கு தெரியாது. இப்படி சில நடிகர்கள் தங்களது குடும்பம் சொந்த பந்தங்கள் குறித்த எந்த தகவலையும் பகிரங்கப்படுத்தாமல் அவர்கள் மட்டுமே வெளியுலகில் தெரிவார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நல்ல இயக்குனராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சசிக்குமார். சுப்ரமணியபுரம் அவர் இயக்கி நடித்த முதல் படம். பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்து நாடோடிகள் படத்தில் அவரது நடிப்பு வேற லெவலில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அயோத்தி படம் சசிக்குமாரின் திரை பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது.

- Advertisement -

இப்போது சசிக்குமார் சிம்ரன் நடிப்பில் டூரிஸ்ட் பேமிலி என்ற படம் வெளியாகி உள்ளது. இந்த படம் குறித்து ஏற்கனவே பாசிட்டிவ் விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்த படம் நிச்சயமாக பெரிய அளவில் கொண்டாடப்படும் ஒரு படமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. நடிகர் சசிக்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என ரசிகர்கள் பலரும் கருதும் நிலையில் இதுகுறித்து சசிக்குமார் சமீபத்தில் பேசியிருக்கிறார்.

நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் சசிக்குமார் கூறியதாவது, எனக்கு கல்யாணமாகி மனைவி குழந்தைகள் இருக்காங்க. ஆனா என் சினிமா வாழ்க்கையில் அவங்கள நான் பெருசா காட்டிக்கிறது இல்லை. அதற்கு காரணம் இப்போ அவங்க சாதாரணமா பஸ்ல போறாங்க, ஆட்டோல போறாங்க. என் புள்ளைங்க கிராமத்தில் இருக்கிற ஒரு பள்ளியில்தான் படிக்கிறாங்க. அவங்களுக்கு அந்த வாழ்க்கை தான் புடிச்சிருக்கு. அதனால நானும் அவங்கள கட்டாயப்படுத்தல என்று நடிகர் சசிக்குமார் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்