மணிரத்னம் இந்திய சினிமாவில் அடையாளம் சொல்லப்படும் ஒரு முக்கிய இயக்குனராக பார்க்கப்படுகிறார். மணிரத்னம் படங்கள் என்றாலே எப்போதுமே தனி அங்கீகாரமும், அடையாளமும், மரியாதையும், கௌரவமும் இருக்கிறது. இந்திய சினிமாவில் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என எந்த மொழி மொழி நடிகராக, நடிகையாக இருந்தாலும் மணிரத்னம் படத்தில், அவரது இயக்கத்தில் நடிப்பது பெரிய பாக்கியம் என்று கருதுகின்றனர்.
மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம், மௌனராகம், நாயகன், பம்பாய், ரோஜா, உயிரே உள்பட சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் வரை எல்லா படங்களுமே மணிரத்னம் பெயரைச் சொல்லும் படங்களாக தான் இருந்திருக்கின்றன. அந்தளவுக்கு பெருமை மிகு இயக்குனராக உள்ள அவர், இப்போது தக்லைப் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இளையராஜா சமீபமாக சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டு விவகாரம் செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் அவரது பெயர் அடிக்கடி அடிபட்டுக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக நான் இசையமைத்த பாடல்கள் எனக்கு மட்டுமே சொந்தம் என்று அவர் அடம்பிடிப்பது பலரையும் முகம் சுளிக்க வைக்கிறது. இப்போது கூலி படத்தின் டீசரில் தனது இசையை பயன்படுத்தி விட்டதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அவர் நோட்டீஸ் அனுப்பியது பெரிய கலவரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் பின்விளைவுகள் மிக மோசமாக இருக்கும். ஏனெனில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் மோதுவது இளையராஜா செய்த மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், சினிமா மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு முக்கிய தகவலை வீடியோ ஒன்றில் கூறியிருக்கிறார். ரோஜா என்ற படத்தை மணிரத்னம் இயக்கினார். இந்த படத்தை கே பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. இந்த படத்துக்கு இசையமைத்தவர் ஏஆர் ரகுமான். இந்த படத்தின் மூலமாகதான் இசையமைப்பாளராக ஏஆர் ரகுமான் அறிமுகமானார்.
ஆனால் ரோஜா படத்துக்கு முதலில் இசையமைக்க இருந்தவர் இளையராஜா தான். அந்த படத்தின் தயாரிப்பாளரான கே பாலச்சந்தர், மணிரத்னத்தை அனுப்பி இளையராஜாவை போய் பார்த்துவிட்டு வரச்சொல்லி இருக்கிறார். அப்போது இளையராஜா, மணிரத்னத்தை வெகுநேரம் ஒரு மரத்தடியில் நிற்க வைத்து காக்க வைத்திருக்கிறார். நீண்ட நேரம் ஆகியும் மணிரத்னத்தை இளையராஜா அழைக்கவே இல்லை. இது அறிந்த பாலச்சந்தர், காரை எடுத்துக்கொண்டு வந்து, மணிரத்னத்தை காரில் திரும்ப அழைத்துக் கொண்டு சென்று இருக்கிறார்.
மிகப்பெரிய இயக்குனர் மணிரத்னத்தை இப்படியா காக்க வைத்து அவமானப்படுத்துவது என்ற கோபத்தில் இருந்த கே பாலசந்தர், எனக்கு தெரிந்த ஒரு பையன் இருக்கிறான். அவனை வைத்து இந்த படத்துக்கு இசையமைத்து விடலாம் எனக்கூறிய பாலச்சந்தர் ஏஆர் ரகுமான் பெயரை பரிந்துரை செய்திருக்கிறார். அதன்பிறகு தான் ரகுமான் இந்த படத்தின் மூலம் முதன் முதலாக இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். ரோஜா படத்திற்கு முன்பு வரை இளையராஜா,மணிரத்னம் சேர்ந்து ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்திருக்கின்றனர் என்று செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.





