- Advertisement -
Homeபொழுதுபோக்குகேரளாவில் நடிகர் விஜய் தங்கியிருந்த ஓட்டலில் நடந்த அந்த விஷயம், இப்படியா தளபதி நடந்துக்குவாரு -...

கேரளாவில் நடிகர் விஜய் தங்கியிருந்த ஓட்டலில் நடந்த அந்த விஷயம், இப்படியா தளபதி நடந்துக்குவாரு – வைரலாகும் வீடியோ

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருக்கிறார். த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். முதலில் இலங்கையில் நடத்த திட்டமிட்டிருந்த இந்த படப்பிடிப்பு இப்போது கேரளாவுக்கு மாற்றப்பட்டு, அங்கு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நடிகர் விஜய் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள், இயக்குனர் வெங்கட்பிரபு பங்கேற்று படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், இப்போது கேரளாவில் முடித்துவிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் இன்னும் 10 நாட்கள் இந்த படப்பிடிப்பை முழுமையாக முடிக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் ரஷ்யா செல்வார்களா, மாட்டார்களா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

- Advertisement -

இந்த படத்தை பொருத்த வரை, விஜய்க்கு இது இரட்டை ரோலில் நடித்துள்ள டபுள் ரோல் படம்தான். இதில் அரசியல் வசனங்களோ, காட்சிகளோ இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அவரது அடுத்த படம் 69வது படத்தில், அரசியல் நெடி அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலுக்கு முந்தைய படமாக அதை விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இப்போது கேரளாவில் இருக்கும் விஜய்க்கு, அங்குள்ள கேரளா ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவை, வரவேற்பை, உற்சாகத்தை அளித்து வருகின்றனர். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விஜய்க்கு அவர்கள் காட்டி உற்சாக ஆர்வத்தால், விஜய் பயணித்த காரின் கண்ணாடிகள் உடைபட்டு அந்த காரும் பயங்கரமாக சேதமடைந்துவிட்டது.

- Advertisement -

எனினும் தொடர்ந்து விஜய் படம் ஷூட்டிங் நடக்கும் ஸ்டேடியம், விஜய் தங்கியிருக்கும் ஓட்டல் என ரசிகர்கள் தொடர்ந்து அவரை நேரில் பார்க்க கூட்டம் கூட்டமாக வருகின்றனர். அவர்களை பார்த்து கையசைக்கும் விஜய், அவர்கள் கையில் பூ மாலையில் இருந்தால் நேரில் சென்று வாங்கிக்கொள்கிறார். தன்னுடைய அன்பை வெளிப்படுத்துகிறார். கேரவன் வேன் மீது ஏறி நின்று மலையாளத்தில் பேசி செல்பி எடுத்து உற்சாகப்படுத்துகிறார்.

இப்போது கேரளாவில் நடந்த ஒரு நெகிழ்வான சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது. அதாவது விஜய் தங்கியிருக்கும் ஓட்டலில் இருந்து வெளியே வருகிறார். அப்போது போலியோவால் கால்கள் சூம்பிப்போய் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் விஜயை காண அவர் வரும் வழியில், வீல் சேரில் அமர்ந்திருக்கிறார். அவரை பார்த்தவுடன் அருகில் சென்ற விஜய், நலம் விசாரிக்கிறார். பின், அந்த ரசிகருக்காக ஒரு காலை மடித்து மண்டியிட்டு அமர்ந்து அந்த ரசிகருடன் புகைப்படம் எடுக்கிறார். அந்த வீடியோ இப்போது செம வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்